Published:Updated:

காரைக் கடத்தினாரா திருச்சி சிவாவின் மருமகன்? - புகாரும் பின்னணியும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருச்சி சிவாவின் மருமகன் முத்துக்குமார்
திருச்சி சிவாவின் மருமகன் முத்துக்குமார்

``நான்தான் காரை எடுத்தேன் என்பதற்கு அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? எனது கிளையன்ட்காக நான் வாதாட வந்திருக்கிறேன். இதில், நான் எப்படி குற்றவாளியாக முடியும்?''

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் இஸ்மாயில். கடந்த 4-ம் தேதி, சென்னையிலிருந்து, எர்டிகா காரில் இளையான்குடிக்குச் சென்றிருக்கிறார்.

சம்மந்தப்பட்ட கார்
சம்மந்தப்பட்ட கார்

அப்போது, அவரின் காரை வழிமறித்து பறிமுதல் செய்ததாக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவின் மருமகன் காரத்தே முத்துகுமார், ஐஸ்ஹவுஸ் பிஸ்மில்லாகான், புதுப்பேட்டை கார்புரோக்கர் யூசுப், இளையான்குடி ரியாஸ் அஹமது ஆகிய 4 பேர் மீது நீதிமன்ற உத்தரவு படி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. என்ன நடந்தது, ஏன் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார்கள் என்று என்று விசாரிக்க தொடங்கினோம்.

இதுதொடர்பாக காரைப் பறிகொடுத்த அன்வர் இஸ்மாயிலிடம் பேசினோம். ``லீஸுக்கு கார் வாங்கி ஓட்டலாம் என்று தேடிக் கொண்டிருந்த நேரத்தில், கார் புரோக்கர் யூசுப் மூலமாக சாதிக் உசேன் என்பவருடைய எர்டிகா (TN-05-BU-3964) காரைக் காட்டினார்கள். வண்டியோட ஆர்.சி புக்கைக் கேட்டதற்கு. `டி.ஒ ஃபார்ம்ல பேர மாத்தி தர்றோம். அதுவரையிலும் வண்டியை ஓட்டுங்கள்’ என்றார்கள்.

அன்வர் இஸ்மாயில்
அன்வர் இஸ்மாயில்

நானும் நம்பி ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதத்துக்கு ரூ. 3,50,000 கொடுத்து ஒப்பந்தம் போட்டேன். `கொரோனா நேரம் என்பதால் வண்டி ஓட்டம் பெரிதாக இல்லை. பணத்தைக் கொடுத்து காரை எடுத்துக்கொள்ளுங்கள்; என்றேன். பணத்தைக் கொடுக்காமல் வண்டியை எடுத்துவிடலாம் என்று பலவழிகளில் வேலை செய்தார்கள். அப்போது எனக்குத் தெரியவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 4-ம் தேதி சென்னையிலிருந்து இளையான்குடிக்கு சவாரி ஒன்று வந்தது.

ஒப்பந்த பத்திரம்
ஒப்பந்த பத்திரம்

அதில், எனது டிரைவர்கள் யூசப், அல்லாபிச்சையை அனுப்பினேன். திருச்சி ஏர்போர்ட்கிட்ட போயிட்டு இருக்கும்போது நாலு பேர் காரை வழிமறித்து, கலெக்டரின் சிறப்புக் காவல்படை அதிகாரிகள் என்று சொல்லி, டிரைவர்களைத் தாக்கி காரை எடுத்துச் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மன்னார்குடி: `கட்டப்படாத 140 வீடுகள்; ரூ.3 கோடி மோசடி!’ - அதிரவைத்த ஊராட்சி முறைகேடு

டிரைவர் அல்லாபிச்சை போலீஸாரிடம் புகார் கொடுக்கச் செல்லும்போது தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மருமகன் முத்துக்குமார் என்பவர் போன் பண்ணி, `கம்ப்ளெயின்ட் எதுவும் கொடுக்காம, ஒழுங்கு மரியாதையா லாரிய புடிச்சு சென்னை பக்கம் போய் சேரு’ என்று மிரட்டியிருக்கிறார். டிரைவர் பதறிப்போய் எனக்குத் தகவல் சொல்ல, நான் முத்துக்குமாருக்கு போன் செய்தேன்.

முத்துக்குமார்
முத்துக்குமார்

அதற்கு அவர், `கார் ஓனர் சாதிக் உசேனிடம் கார் சேர்ந்துவிட்டது’ என்று மட்டும் கூறி போனைத் துண்டித்தார். நான் பணம் கொடுத்து வாங்கிய காரை இவர்கள் எப்படி வழிப் பறித்து அவரிடம் கொடுக்க முடியும்? எனது காரில் இருந்த பொருள்களை முத்துக்குமாரின் ஜூனியர் வழக்கறிஞர் திருச்சியில் உள்ள இந்திரா பஸ் ஸ்டாப்கிட்ட கொடுக்கச் சொல்கிறார். அந்த ஆடியோக்கள் என்னிடம் இருக்கின்றன. பல ஆதாரங்களோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தேன் நடவடிக்கை இல்லை” என்றார்.

அன்வர் இஸ்மாயிலின் வழக்கறிஞர் சாகுல் அமீதிடம் பேசினோம். ``இவர்கள் கார் திருடும் கும்பலோ என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் (TN-05-BU-3964) இந்த காரை வியாசர்பாடி சேர்ந்த ஜமால் முகமதுவின் பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். குடும்பப் பிரச்னைகளால் இந்தக் காரை விற்பனை செய்ய சென்னை கொடுங்கையூரில் உள்ள ஆயிஷா கார் ஷாப்பில் வெளியில் நிறுத்தியுள்ளனர்.

வழக்கறிஞர் சாகுல் அமீது
வழக்கறிஞர் சாகுல் அமீது

அங்கிருந்த காரை யாரோ திருடியிருக்கிறார்கள். அவர் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதற்கு சி.எஸ்.ஆரும் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் ஆறுமாதத்துக்கு முன்பு, திருடு போன கார் எப்படி இவர்களுக்கு வந்தது?

எந்த அடிப்படையில் முதல் (ஜமால் முகமது) ஓனரின் கையெழுத்து இல்லாமல் சாதிக் உசேனிடம் கார் வந்தது? கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரு நபர்கள் இல்லாமல் அடாவடியாகக் காரை எப்படி முத்துக்குமாரின் ஆதரவாளர்கள் பறிக்கலாம். முத்துக்குமார், எஸ்.ஐ-யிடம் பேசும்போது கார் சம்பந்தப்பட்டவருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது என்கிறார்.

காரில் இருந்த பொருள்கள்
காரில் இருந்த பொருள்கள்

`எங்க திருச்சி சிவா மாமா வீட்டில படுத்திருக்கிறேன்’ என்றெல்லாம் அந்த ஆடியோவில் பேசுகிறார். அதற்கான ஆடியோக்கள் எங்களிடம் இருக்கின்றன. புகார் கொடுத்த அன்றே அவர்களுடைய போன் கால்களை ட்ரேஸ் செய்திருந்தால் அனைத்து உண்மைகளும் வந்திருக்கும். ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த வழக்கை சும்மாவிடப் போவதில்லை" என்றார் காட்டமாக.

காரின் முதல் உரிமையாளரான ஜாமல் முகமதுவிடம் பேசினோம்.``உண்மைதான். என் மகளுக்காகத்தான் இந்த எர்டிகா (TN-05-BU-3964) காரை கோட்டேக் மகேந்திரா பேங்க்ல 4 லட்ச ரூபாய் பணத்தைக்கட்டி லோனில் வாங்கினேன். 7.5.2019 அன்று கார் காணாமல் போனது.

ஜாமல் முகமது பெயரில் ஆர்.சி புக்
ஜாமல் முகமது பெயரில் ஆர்.சி புக்

இத்திருட்டில் என் மருமகனும் இருப்பதாகவும் சொல்கிறார்கள். கார் எனது பெயரில் இருக்கிறது. அதுவும் லோன்ல இருக்கும்போது, இதை எப்படி சாதிக் உசேனிடம் கொடுக்க முடியும்? இது சம்பந்தமாக என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. எங்கு அழைத்தாலும் ஆதாரங்களைத் தருகிறேன்" என்று முடித்துக்கொண்டார்.

`வண்டியை எப்ப கொடுப்ப; பணம் வரும்போது’ - 16 வாடகைக் கார்களை அடகு வைத்து நூதன மோசடி

இதுகுறித்து முத்துக்குமாரிடம் கேட்டோம். ``இந்த வழக்கு ஒரு அடிப்படை முகாந்திரம் இல்லாத வழக்கு. முதலில், `சம்பந்தப்பட்ட இடத்தில் நான் இருந்தேன்’ என்று சொன்னார்கள். இப்போது இல்லை என்கிறார்கள். நான்தான் காரை எடுத்தேன் என்பதற்கு அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? எனது கிளையன்ட்காக நான் வாதாட வந்திருக்கிறேன். இதில் நான் எப்படிக் குற்றவாளியாக ஆக முடியும்?

முத்துக்குமார்
முத்துக்குமார்

ஏர்போர்ட் காவல் நிலையத்தில் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். என் மீது தவறு இல்லாததால் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சம்மன் அனுப்பியும் இன்று வரையிலும் ஆஜராகவரவில்லை. காரணம், அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. இவ்வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்னைச் சிக்க வைக்க நினைக்கிறார்கள். இவ்வழக்கை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பற்றி எப்படி வேண்டுமானால் எழுதிக்கொள்ளுங்கள் என் மாமாவின் பெயரை மட்டும் பயன்படுத்தாதீர்கள். நான் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவன். என்னைப் பற்றி அவதூறாகச் செய்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன்” என்றார்.

திருச்சி மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன்
திருச்சி மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன்

இதுகுறித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையர் லோகநாதனிடம் பேசினோம். ``அன்வர் இஸ்மாயில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர் எந்தவித ஆவணங்களையும் முறையாக சமர்ப்பிக்கவில்லை. அவர் சமர்ப்பிக்கும் பட்சத்தில் ஒரு தனி டீம் போட்டு விசாரிக்கிறேன். இதில் எந்தவித அரசியல் தலையீடுகள் வந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு