Published:Updated:

`நடிகை மீரா மிதுன் எங்கே...' - லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு?!

மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் நீண்டகாலமாகத் தலைமறைவாக இருப்பதால் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர்.

`நடிகை மீரா மிதுன் எங்கே...' - லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு?!

நடிகை மீரா மிதுன் நீண்டகாலமாகத் தலைமறைவாக இருப்பதால் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
மீரா மிதுன்

பட்டியலினத்தவரை இழிவாகப் பேசிய வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகை மீரா மிதுனைக் கைதுசெய்தனர். அவர் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த நடிகை மீரா மிதுன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிடிவாரன்ட் பிறக்கப்பட்ட நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகை மீரா மிதுனைத் தேடிவருகின்றனர்.

மீரா மிதுன்
மீரா மிதுன்

இந்த நிலையில் தன்னுடைய மகளைக் கண்டுபிடித்துத் தரும்படி நடிகை மீரா மிதுனின் அம்மா, சில வாரங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். இந்தப் புகார் மனு, கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிறகும் நடிகை மீரா மிதுன் எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நடிகை மீரா மிதுனின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் நடிகை மீரா மிதுனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அவரைத் தேடிக்கொண்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, நடிகை மீரா மிதுன் குறித்துச் சில தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதில், `நடிகை மீரா மிதுன் பயன்படுத்திவந்த செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவர், தன்னுடைய குடும்பத்தினரையும் தொடர்புகொள்ளவில்லை. அதனால் அவர் எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

மீரா மிதுன்
மீரா மிதுன்

இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நடிகை மீரா மிதுன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமலிருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸை அனுப்ப முடிவு செய்திருக்கின்றனர். அது தொடர்பான நடைமுறைகள் முடிந்த பிறகு நடிகை மீரா மிதுனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ``நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த இரண்டு வழக்குகளிலும் அவர் தலைமறைவாக இருக்கிறார். பெங்களூரில் அவர் தலைமறைவாக இருப்பதாகக் கிடைத்த ஒரு தகவலின்படி அங்கு விசாரித்தபோது நடிகை மீரா மிதுன் அங்கிருந்தும் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து அவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.