Election bannerElection banner
Published:Updated:

``என் சாவுக்குக் காரணம் அந்த நான்கு போலீஸ்தான்!' - செங்கல்பட்டு ரவுடி வீடியோவின் `பலே' பின்னணி

ரவுடி பிரபு
ரவுடி பிரபு

இது போலீஸ் கேஸ். நீங்க அரசு மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். பிரபு தகராறு செய்தும் அவர்கள் அனுமதிக்காததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆக முயன்றிருக்கிறார். அங்கேயும் அவரை அனுமதிக்காததால் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.

``திருந்தி வாழும் என்னை மணல் கடத்தச் சொல்லி போலீஸ்காரங்க மிரட்டுகிறார்கள்” எனச் செங்கல்பட்டு ரவுடி ஒருவர் அரளி விதையைச் சாப்பிடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்கும் போது வேறுவிதமான தகவல்களும் கிடைக்கின்றன.

ரவுடி பிரபு
ரவுடி பிரபு

ரவுடி பிரபு வெளியிட்டுள்ள வீடியோவில், ``என் மீது சில வழக்குகள் இருக்கின்றன. நான் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராகிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் தம்பிக்கும் பிரச்னை என்பதால், அடிச்சு துரத்திட்டேன். என்னுடைய பெரிய பொண்ணு வம்புதும்புக்குப் போகக்கூடாது எனச் சொன்னதால நான் எந்தத் தப்புக்கும் போறதில்லை. ஸ்டேஷன்குப் போய் 110 போட்டுக்கிட்டு வந்தேன். திடீர்னு வீட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, குமார் எஸ்.ஐ. கூப்பிடறார், ஸ்டேஷனுக்கு வரணும்னு சொன்னாங்க. நான் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். இதைக் கேட்டதும் என் பொண்டாட்டி சாகப் போறேன்னு சொன்னா. இப்ப திடீர்னு வந்து கூப்பிட்டா நான் என்ன செய்வேன்? என்னை மண் ஓட்டச் சொல்லி மிரட்டினாங்க. நான் முடியாதுன்னு சொன்னேன். இல்லைன்னா காசு கொடுன்னு சொல்லி மிரட்டுறாங்க. இந்த அரளி விதையைச் சாப்பிட்டுவிட்டு சாகப்போகிறேன். என் சாவுக்குக் காரணம் அந்த நான்கு போலீஸ்தான்” எனச் சொல்லிக்கொண்டே அரளி விதையை வாயில் வைக்கிறார்.

சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பகுதியில் வசிப்பவர்கள் பிரபு- பிரேம்குமார் சகோதரர்கள். இருவர் மீதும் பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கடத்தல், மணல்கடத்தல் எனப் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. பிரபு பெயரில் அடையாறு காவல்நிலையத்தில் ஹவாலா வழக்கும் உள்ளது. இருவரும் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளனர். ஆனாலும் இவர்கள் திருந்துவதாக இல்லை.

`10 லட்சம் பணம் வரலைன்னா, கொன்னே போட்ருவோம்!’- ரவுடி ஜானியால் மிரளும் வேலூர் தொழிலதிபர்கள்

இருவரும் பாலாற்றில் மணல் திருட்டு தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்குப் புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துவர பிரபுவின் வீட்டிற்குச் சென்றனர். இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காவல்நிலையம் திரும்பும்போது அழைத்து வந்த காவலர்களைத் தள்ளிவிட்டுவிட்டு இருவரும் தப்பி இருக்கிறார்கள். இதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் குமாரை அவருடன் வந்த காவலர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் போலீஸே மணல் கடத்தல் செய்யச் சொல்வது போன்று சித்திரித்து வீடியோவைப் பரப்பி வருகிறார் ரவுடி பிரபு.

இந்தநிலையில் அரளி விதையைச் சாப்பிடாமல், சாப்பிடுவது போன்று பாவனை காட்டி வீடியோவும் வெளியிட்டிருக்கிறார். அதேபோல், தூக்கிட்டுக் கொள்வதுபோல வீடியோ ஒன்றையும் எடுத்துக் கொண்டார். பின்பு செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறி சிகிச்சைக்கு அனுமதிக்க வற்புறுத்தி இருக்கிறார்.

ரவுடி பிரபு
ரவுடி பிரபு

ஆனால், `இது போலீஸ் கேஸ். நீங்க அரசு மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும்' என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பிரபு தகராறு செய்தும் அவர்கள் அனுமதிக்காததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆக முயன்றிருக்கிறார். அங்கேயும் அவரை அனுமதிக்காததால் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். தற்போது தலைமறைவாக இருக்கும் அவர், காவல்துறையினர் மீது பழியைப் போட்டு திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளார்” எனச் சொல்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு