Election bannerElection banner
Published:Updated:

`உயர்ரக மதுபாட்டில்களை மட்டும் காணவில்லை!’ - விற்பனையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த டாஸ்மாக் கொள்ளை

டாஸ்மாக் கொள்ளை
டாஸ்மாக் கொள்ளை

`கொள்ளையர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த அதிக மதிப்பிலான உயர்தர மதுபாட்டில்களை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர். மற்ற குறைவான விலை கொண்ட மதுபாட்டில்கள் அப்படியேதான் இருக்கின்றன.'

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆலங்காட்டில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. வழக்கம்போல் கடையின் விற்பனையாளர் மற்றும் சூப்பரவைசர் டாஸ்மாக் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். காலை வழக்கம்போல் கடையைத் திறக்கக் கடையின் விற்பனையாளருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சூப்பர்வைசர் சூரியகுமார், வடகாடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

விசாரணையில் 88,000 ரூபாய் மதிப்பிலான உயர்ரக மது பாட்டில்கள் மட்டும் திருடு போயுள்ளது. பல லட்சம் மதிப்பிலான மற்ற மதுபாட்டில்களைத் திருடவில்லை. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது,``கொள்ளையர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த அதிக மதிப்பிலான உயர்தர மதுபாட்டில்களை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர். மற்ற குறைவான விலை கொண்ட மதுபாட்டில்கள் அப்படியேதான் இருக்கின்றன. அதை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

`டாஸ்மாக் கடையில் கொள்ளை; கள்ளச் சந்தையில் விற்பனை!’ - போலீஸில் சிக்கிய ஊராட்சிமன்றத் தலைவர் மகன்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு