Published:Updated:

வாட்டிய வறுமை; குழந்தைகளை விற்ற தாய்! - புரோக்கர்கள் உட்பட 7 பேர் தலைமறைவு!

முக்கூடல் காவல் நிலையம்
முக்கூடல் காவல் நிலையம்

சில மாதங்களுக்கு முன்பு பிறந்த மற்றொரு பெண் குழந்தையையும் விற்பனை செய்ய முயன்றிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள மைலப்புரம் மேட்டுத் தெருவில், ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்துவருகிறார். திருப்பூரைச் சேர்ந்த ராணி, தன் கணவருடனும் குழந்தைகளுடனும் வசித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் ராணியைப் பிரிந்து சென்றுவிட்டார்.

குழந்தைகள் விற்பனை நடந்த கிராமம்
குழந்தைகள் விற்பனை நடந்த கிராமம்

கணவர் பிரிந்து சென்றபோது ஆறு மாதக் குழந்தையைச் சுமந்துவந்த ராணி, தன் முதல் குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்திருக்கிறார். அதனால் அந்தக் குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் புரோக்கர்களான வியாகம்மாள் மேரி, மார்க்ரெட் தீபா ஆகியோரைச் சந்தித்திருக்கிறார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ராணி தனது இரண்டு வயதுள்ள மகளை முக்கூடல் பகுதியைச் சேர்ந்த ஜான் எட்வர்ட் - அற்புதம் என்ற தம்பதியிடம் 30,000 ரூபாய்க்கு விற்றிருக்கிறார்.

முக்கூடல் காவல் நிலையம்
முக்கூடல் காவல் நிலையம்

தேவிக்கு இரண்டாவதாக சுரண்டை தனியார் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை கருவில் இருந்தபோதே புரோக்கரான மார்க்ரெட் தீபா மூலம் தென்காசியைச் சேர்ந்த அமலா பாத்திமா - ஞானமிக்கேல் தம்பதியருக்குப் பேரம் பேசியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேவியின் பிரசவச் செலவையும் குழந்தையை வாங்கவிருக்கும் தம்பதியரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததுடன், குழந்தைக்கான தொகையாக 1,25,000 தருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதன்படி தேவி, தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிசேரியன் மூலம் பெண் குழந்தை பெற்றிருக்கிறார்.

நீலகிரி: வாட்டிய வறுமை.. 3 குழந்தைகளையும் விற்ற பெற்றோர்! - ஊட்டியை உறையவைத்த குழந்தை விற்பனை

பிறந்து 25 நாளான அந்தக் குழந்தையை அமலா பாத்திமா-ஞானமிக்கேல் தம்பதியினர் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். குழந்தைகள் விற்பனையில் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட வியாகம்மாள் மேரி , மார்க்ரெட்தீபா ஆகியோருக்கு இடையே பணத்தைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு காரணமாக இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது. இது பற்றிய தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினருக்குத் தெரியவந்ததால் அவர்கள் விசாரித்து விற்பனை செய்யப்பட்ட இரு பெண் குழந்தைகளையும் மீட்டு ஆலங்குளத்திலுள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

குழந்தை விற்பனை நடந்த வீடு
குழந்தை விற்பனை நடந்த வீடு

குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் தரப்பில் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளின் தாய் ராணி, குழந்தைகள் விற்பனை புரோக்கர்கள் இரண்டு பேர் , குழந்தைகளைச் சட்டவிரோதமாக விலைக்கு வாங்கிய பெற்றோர்கள் நான்கு பேர் என ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடிவருகிறார்கள்.

இது பற்றி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரகுமார் கூறுகையில், ``குழந்தைகளை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. வறுமையின் காரணமாகக் குழந்தைகளை வளர்க்க முடியாதவர்கள், அரசாங்கத்திடம் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டுமே தவிர தாங்களாகவே விற்பனை செய்யக் கூடாது.

அனுமதியின்றி குழந்தைகளை விற்பனை செய்வதோ வாங்குவதோ சட்ட விரோதமான செயல்
சந்திரகுமார் , மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர்

குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புபவர்கள் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி அரசின் அனுமதியுடன் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளைச் சட்டவிரோதமாக விற்பதோ வாங்குவதோ தவறு. அத்தகையவர்கள் மீது காவல்துறை உதவியுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

வாட்டிய வறுமை; குழந்தைகளை விற்ற தாய்! - புரோக்கர்கள் உட்பட 7 பேர் தலைமறைவு!

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு