Published:Updated:

கணவரைப் பிரிந்து வாழும் பெண் பாலியல் வன்கொடுமை; திமுக நிர்வாகி உட்பட 8 பேர்மீது வழக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( representational image )

மார்த்தாண்டம் பகுதியில் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் உட்பட எட்டுப் பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். அவர் திருமண தகவல் மையத்தில் வேலை செய்துவருகிறார். அதன் உரிமையாளர் உட்பட சிலர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எட்டுப் பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் தரப்பில் விசாரித்தோம். போலீஸார் கூறுகையில், ``மார்த்தாண்டம் அருகேயுள்ள ஒரு பெண் கணவனைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். அவர் ஜெபர்சன் என்பவர் நடத்திவந்த திருமண தகவல் நிலையத்தில் வேலை பார்த்துவந்திருக்கிறார். அந்தப் பெண்ணைத் திருமண தகவல் நிலைய உரிமையாளரான ஜெபர்சன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதோடு அந்தப் பெண்ணுடன் தனியாக இருந்தை ஜெபர்சன் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் ஜெபர்சன்.

தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜான் பிரைட்
தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜான் பிரைட்

மேலும், ஜெபர்சன் நாகர்கோவில் என்.ஜி.ஓ காலணியிலுள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை அடைத்துவைத்த நிலையில், அவரது நண்பர்களும் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களில் அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன், திருவட்டாறு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜான் பிரைட் கென்சிலின் ஜோசப், கலிஸ்டர் ஜெபராஜ் உட்பட எட்டுப் பேர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தப் பெண் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்திருக்கிறார். ஆனாலும் போலீஸார் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறார்கள். இந்தநிலையில், திருமண தகவல் மையம் நடத்திய ஜெபர்சன் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகும் அந்தப் பெண் போலீஸாரிடம் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் போலீஸாரோ, ``நீ புகார் அளித்ததால்தான் ஜெபர்சன் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் மனைவி புகார் அளித்திருக்கிறார்'' எனக் கூறியிருக்கின்றனர். மேலும், ஜெபர்சன் மரணத்துக்கு அந்தப் பெண்தான் காரணம் என்றரீதியில் அவரை போலீஸார் மிரட்டியதாகவும், பின்னர் அந்த வழக்கைக் கிடப்பில் போட்டதாகவும் கூறப்படுகிறது.

பெண் எஸ்.பி-க்குப் பாலியல் தொல்லை: நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ஆஜர்
அருமனை ஸ்டீபன்
அருமனை ஸ்டீபன்

அவர்களின் மிரட்டல் காரணமாக அந்தப் பெண் அமைதியாக இருந்திருக்கிறார். இதற்கிடையில் அருமனையில் நடந்த போராட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரிவினையைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கைதுசெய்யப்பட்ட சம்பவமும். அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த ஸ்டீபன் கைதுசெய்யப்பட்ட சம்பவமும் நடந்தன. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் மீண்டும் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்தே மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு