Published:Updated:

ராஜபாளையம் அருகே 183 யூனிட் ஆற்றுமணல் பறிமுதல் - கம்யூனிஸ்ட் பிரமுகர் மீது வழக்கு பதிவு!

மணல் குவாரி

ராஜபாளையம் அருகே ஆற்று மணலை பதுக்கிவைத்திருந்த புகாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான இடங்களிலிருந்து 183 யூனிட் ஆற்று மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராஜபாளையம் அருகே 183 யூனிட் ஆற்றுமணல் பறிமுதல் - கம்யூனிஸ்ட் பிரமுகர் மீது வழக்கு பதிவு!

ராஜபாளையம் அருகே ஆற்று மணலை பதுக்கிவைத்திருந்த புகாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான இடங்களிலிருந்து 183 யூனிட் ஆற்று மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
மணல் குவாரி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து பிறாக்குடி கண்மாய்க்கு வரும் ஆற்றுப்படுகையில் டூ வீலர் மற்றும் டிராக்டர் மூலம் ஆற்றுமணல் திருட்டு நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் கோயில், வாழவந்தாள் கண்மாய், அசையாமணி விலக்கு உள்ளிட்ட பகுதிகள் வழியாக, தினமும் சுமார் 70 டூ வீலர்கள் அதிகாலை முதல் காலை 10 மணி வரையிலும், பிற்பகலில் தொடங்கி இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுவதாக ராஜபாளையம் வட்டாட்சியர் ராமசந்திரனுக்குப் புகார் வந்தது.

புகாரின்படி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், கடந்த 2-ம் தேதி அப்பகுதியில் வருவாய்துறையினருடன் திடீர் ரோந்துக்குச் சென்றார். அப்போது குடியிருப்புப் பகுதிகளில் சிமென்ட் சாக்குப்பைகளில் ஆற்றுமணல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனையில், சுமார் 30 யூனிட் ஆற்று மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மணல் குவாரி
மணல் குவாரி

இது குறித்து, மணல் பதுக்கிவைத்தவர்களிடம் நடத்திய விசாரணையில், சேத்தூர் பகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராஜா என்ற கருப்பையாவுக்குச் சொந்தமான இடங்களில் ஆற்று மணல் மொத்தமாகப் பதுக்கிவைத்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, குடியிருப்புவாசிகள் சொன்ன தகவலைக்கொண்டு கட்சி பிரமுகர் ராஜா என்ற கருப்பையாவுக்குச் சொந்தமான சேத்தூர்-ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள இடத்திலும், மேட்டுப்பட்டி செல்லும் வழியிலுள்ள தனியார் மதுபான கூடத்துக்கு எதிரே உள்ள இடத்திலும் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அங்கு புதிதாகக் கட்டப்படும் கட்டடத்துக்கு உள்ளேயும், திறந்தவெளி குடோனிலும் அதிக அளவில் ஆற்று மணல் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டபோது, ஆற்று மணலை இருப்பு வைப்பதற்கான‌ முறையான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாதது தெரியவந்தது.

சீல்வைக்கப்பட்ட குவாரி
சீல்வைக்கப்பட்ட குவாரி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மணல் குவாரி
மணல் குவாரி

இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் ராஜாவுக்குச் சொந்தமான‌ இரண்டு மணல் குடோன்களுக்கும் சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட இரண்டு இடங்களில் மொத்தம் 182.95 யூனிட் ஆற்று மணல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட மணல் குடோன்களிலிருந்து ஆற்றுமணலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரும் பணி நடைபெற்றது.

பறிமுதல் செய்யப்பட்ட மணலின் மொத்தச் சந்தை மதிப்பு ரூ.30 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என வருவாய்ப் பிரிவினர் தெரிவித்தனர். இது தொடர்பாக, சேத்தூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார்‌, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் ராஜா என்ற கருப்பையா மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism