Published:Updated:

கோவை: `வீட்டில் பிரசவம்; உயிரிழந்த குழந்தை!' - தாய்மீது வழக்கு பதிவு

கோவை
News
கோவை

நான்காவது குழந்தை என்பதால் அவர் மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புண்ணியவதிக்கு, வீட்டிலேயே பிரசவம் பார்த்திருக்கின்றனர்.

கோவை, உப்புக்கார வீதி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். நகைப் பட்டறையில் பணியாற்றிவருகிறார். இவர் மனைவி பெயர் புண்ணியவதி. இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், புண்ணியவதி மீண்டும் கர்ப்பமடைந்தார்.

கர்ப்பம்
கர்ப்பம்
மாதிரிப் படம்

நான்காவது குழந்தை என்பதால், புண்ணியவதி மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புண்ணியவதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் பிரசவவலி ஏற்படவே, அவர் குடும்பத்தினர் அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்திருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், தொப்புள்கொடி சரியாக அறுபடவில்லை. அதேபோல, பிரசவத்தில் ஏற்பட்ட குறையால் தாய், குழந்தை இருவரும் திடீரென மயங்கிவிட்டனர்.

கோவை அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனை

இதையடுத்து, இருவரையும் அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. சரியாகப் பிரசவம் பார்க்காததே குழந்தை மரணத்துக்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடைவீதி காவல் நிலையம்
கடைவீதி காவல் நிலையம்

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, குழந்தைக்கு உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவது (IPC - 315) பிரிவின் கீழ் கடைவீதி போலீஸார் புண்ணியவதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.