Published:Updated:

பலனளிக்காத சிசிடிவி காட்சி; காரில் மாட்டியிருந்த சேலை; கோவை பெண் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்!

கோவை கார் சி.சி.டி.வி
கோவை கார் சி.சி.டி.வி

பெண்ணைக் கொலை செய்து சடலத்தை வீசினார்களா? அல்லது கார் மோதி சடலம் இழுத்து வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரித்து வந்தது.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பு, அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியதில் உடல் பலத்த சேதமடைந்தது. பீளமேடு போலீஸார் உடலை மீட்டு விசாரித்து வந்தனர். இதனிடையே, அந்த வழியாக சென்ற எஸ்.யூ.வி காரிலிருந்து பெண்ணின் சடலம் விழுவது போன்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

கோவை கார் விபத்து
கோவை கார் விபத்து
கோவை: `ரேஸ் கார் நிபுணர்;  தொழிலில் நஷ்டம்!’ - மகனின் பிறந்த நாளிலேயே கார் ரேஸர் தற்கொலை

பெண்ணைக் கொலை செய்து சடலத்தை வீசினார்களா? அல்லது கார் மோதி சடலம் இழுத்து வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரித்து வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் இரண்டு தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு தனிப்படை போலீஸ் திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்று விசாரித்தனர். ஆனால், வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

விபத்து ஏற்படுத்திய கார்
விபத்து ஏற்படுத்திய கார்

இதனால், போலீஸார் விசாரணை ரூட்டை மாற்றினர். அதன்படி, சூலூர் அருகே பட்டணம் பகுதியில் இருந்த வாகன பழுது நீக்கும் மையத்துக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு இனோவா காரின் அடிப்பாகத்தில் சேலை சிக்கியிருந்ததைப் போலீஸ் கண்டுபிடித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேலையின் ஒரு பகுதியை போலீஸார் ஏற்கெனவே கைப்பற்றியிருந்ததால், அது உயிரிழந்த சடலத்தில் இருந்த சேலை என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து காரைப் பறிமுதல் செய்த போலீஸார், அதன் உரிமையாளரான ஃபைசல் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

கோவை கார் விபத்து
கோவை கார் விபத்து

கரியாம்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்த 80 வயதான லட்சுமி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி கேன்டீனில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அவர், அதிகாலை வேலைக்குச் செல்ல, சாலையைக் கடக்க முயன்றபோது விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது..

ஏற்கெனவே, பிரேத பரிசோதனை முடிவில் அந்தப் பெண் கொலை செய்திருப்பதற்கான தடயங்கள் இல்லை என்றதும், இது விபத்து வழக்குதான் என்று தகவல் வெளியானது. இதையடுத்து, ஃபைசலிடம் போலீஸார் ஆரம்பத்தில் நடத்திய விசாரணையில் அவர் விபத்தை ஏற்படுத்தவில்லை என்று மறுத்துள்ளார்.

விபத்து ஏற்படுத்திய கார்
விபத்து ஏற்படுத்திய கார்

ஆனால், கார் பழுது நீக்கும் கடையில் சிக்கிய சேலைதான் ஃபைசல்தான் இந்த விபத்துக்குக் காரணம் என்பதற்கு ஆதாரமாக சிக்கியுள்ளது. ஃபைசல் விரைவில் கைது செய்யப்படுவார் போலீஸார் கூறியுள்ளனர்

அடுத்த கட்டுரைக்கு