Published:Updated:

தலைமையாசிரியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன் - கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்த போலீஸ்

மிரட்டல் ( சித்தரிப்புப் படம் )

பள்ளித் தலைமையாசிரியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த மாணவனை, போலீஸார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

தலைமையாசிரியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன் - கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்த போலீஸ்

பள்ளித் தலைமையாசிரியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த மாணவனை, போலீஸார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Published:Updated:
மிரட்டல் ( சித்தரிப்புப் படம் )

சேலம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. கடந்த வாரம் ப்ளஸ் டூ மாணவன் ஒருவர் தலைமுடி வெட்டாமல் பின்பக்கம் கொண்டை முடியுடன் வந்ததைப் பார்த்து அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அவரைக் கண்டித்துள்ளார். அதற்கு அந்த மாணவன், ``நான் மட்டும்தான் இப்படி வர்றேனா... மத்தவங்களை கேட்க மாட்டுறீங்க" என்று தலைமையாசிரியர் அலுவலகத்தில் சத்தம் போட்டுக் கத்தியதுடன், டேபிளில் இருந்த கண்ணாடிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உடைத்துள்ளார்.

சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள் மாணவனைச் சமாதானப்படுத்தி பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். பெற்றோரை அழைத்து வரச் சென்ற மாணவன், வரும்போது பீர் பாட்டிலை சட்டையில் மறைத்து வைத்து எடுத்து வந்திருக்கிறார். மாணவன் செய்த செயலைப் பற்றி தலைமையாசிரியர் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டிருக்க, மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து தலைமையாசிரியரைக் குத்த முயன்றுள்ளார் அந்த மாணவர்.

மிரட்டல்
மிரட்டல்
சித்தரிப்புப் படம்

பயந்துபோன தலைமையாசிரியர் தனது அறையை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, ஆத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார். பள்ளிக்கு வந்த போலீஸார் மாணவனை சமாதானப்படுத்தி, ``இப்படிப்பட்ட செயல்களில் ரௌடிகள்தான் ஈடுபடுவாங்க, நீ படிக்கிற பையன்" என்று அறிவுரை வழங்கினர், அதற்கு அந்த மாணவன், ``நானும் ரௌடிதான்... இப்ப என்ன பண்ணணும்" என எதிர்த்து பேசியுள்ளார். இதனால் அறிவுரை கூற வந்த போலீஸாரும் எதுவும் வெளியில் சொல்ல முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் பிறகு, ஆசிரியர்கள் அந்த மாணவனைச் சமாதானப்படுத்தி பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டுக்குச் சென்ற மாணவன் தனது மொபைலின் மூலம் தலைமையாசிரியருக்கும், ஊராட்சிமன்றத் தலைவருக்கும் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், `உங்களைக் கொல்லாம விட மாட்டேன், உங்களை என்ன பண்ணுறேன்னு பாருங்க' என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன தலைமையாசிரியர், உடனடியாக ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீஸார் அந்த மாணவன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரைக் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism