Published:Updated:

கர்நாடகா: போலீஸாருக்கு வழிகாட்டியதால் தாக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் - அதிர்ச்சி வீடியோ

தாக்கப்படும் பெண் வழக்கறிஞர் ( ட்விட்டர் )

கர்நாடக மாநிலத்தில் பெண் வழக்கறிஞரைக் கொடூரமாகத் தாக்கிய ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், பாகல் கோட்டை பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்துவரும் மஹாதேஷ் என்பவரை காவல்துறையினர் ஒரு குற்ற வழக்கில் தேடிச் சென்றுள்ளனர். அப்போது பெண் வழக்கறிஞரான சங்கீதா, மஹாதேஷ் இருக்கும் வீட்டுக்கு வழிகாட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மஹாதேஷ், சங்கீதா தனது வீட்டு அருகே சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார்.

இதனால் படுகாயமடைந்த சங்கீதாவைப் பொதுமக்கள் மீட்டு பாகல் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து மஹாதேஷைக் கைதுசெய்துள்ளனர். மேலும், இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism