Published:Updated:

``பஸ்'ல போயிட்டு வரக் கஷ்டமா இருக்கு... அதான் பைக்கைத் திருடுனேன்!" - கைதானவர் `பகீர்’ வாக்குமூலம்

கைதானவர் வாக்குமூலம்

சென்னையில், கொலைக் குற்றத்தில் கைதாகி ஜாமீனில் வந்த நபர் மீண்டும் பைக் திருட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

``பஸ்'ல போயிட்டு வரக் கஷ்டமா இருக்கு... அதான் பைக்கைத் திருடுனேன்!" - கைதானவர் `பகீர்’ வாக்குமூலம்

சென்னையில், கொலைக் குற்றத்தில் கைதாகி ஜாமீனில் வந்த நபர் மீண்டும் பைக் திருட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கைதானவர் வாக்குமூலம்

சென்னை மந்தைவெளிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஸ்பென்சர் பிளாசாவில் கடை நடத்திவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாகன நிறுத்துமிடத்தில் தனது பைக்கை வீட்டுச் சென்றவர், இரவு வந்து பார்த்தபோது அவர் நிறுத்திய இடத்தில் பைக்கைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த தினேஷ் இது குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, போலீஸார் சிசிடிவி காட்சிகளைக்கொண்டு ஆய்வுசெய்தபோது, மர்ம நபர் பைக்கைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

திருடப்பட்ட பைக்
திருடப்பட்ட பைக்

அதைவைத்து பைக்கைத் திருடிய நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர். அதேநேரத்தில், பைக் திருட்டுப்போனது தொடர்பாக தினேஷ் வாட்ஸ்அப் மூலம் தன்னுடைய நண்பர்களுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார். அதனால், அவர்களும் தேடிவந்திருக்கின்றனர். இந்த நிலையில், அந்த பைக் அண்ணாநகர்ப் பகுதியில் இருப்பதாக தினேஷுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு விரைந்திருக்கிறார் தினேஷ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கு நின்றுகொண்டிருந்த பைக் தன்னுடையது என்று உறுதியானதும், அங்கிருந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த அண்ணாநகர் பகுதி போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பது தெரியவந்தது. இவர் சமீபத்தில் அண்ணாசாலைப் பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

பார்த்தசாரதி
பார்த்தசாரதி

அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, ``நீதிமன்ற உத்தரவுப்படி அண்ணாசாலை காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும். தினமும் நெற்குன்றத்திலிருந்து பேருந்தில் அண்ணா சாலை வர நீண்ட நேரம் ஆகிறது. பேருந்தில் பயணம் செய்யக் கஷ்டமாக இருப்பதால், ஸ்பென்சர் பிளாசா வளாகத்திலிருந்த பைக்கைத் திருடிச் சென்றேன்" என பார்த்தசாரதி கூலாகச் சொல்லியிருக்கிறார். அதையடுத்து, போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.