Published:Updated:

மெரினா கடற்கரை மணலில் புதைத்துவைத்து சாராய விற்பனை - வடமாநிலத்தவர்களை கைதுசெய்த போலீஸ்!

சாராய விற்பனை

சென்னை மெரினா கடற்கரை மணலில் சாராயத்தைப் புதைத்துவைத்து விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மெரினா கடற்கரை மணலில் புதைத்துவைத்து சாராய விற்பனை - வடமாநிலத்தவர்களை கைதுசெய்த போலீஸ்!

சென்னை மெரினா கடற்கரை மணலில் சாராயத்தைப் புதைத்துவைத்து விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Published:Updated:
சாராய விற்பனை

சென்னை மெரினா கடற்கரையில் மணலில் புதைத்துவைத்து சாராய விற்பனை நடைபெறுவதாக மயிலாப்பூர் பகுதி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கண்ணகி சிலைக்கு அருகிலிருந்த இடத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில், மணலில் சாராயத்தைப் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிறிய, பெரிய தண்ணீர் பாட்டிகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.

கைது
கைது
சித்தரிப்புப் படம்

மணலில் புதைத்துவைத்து சாராய விற்பனை செய்ததாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுனந்தா, சில்பா போஸ்லே, ஜென்தூஸ் கோஸ்லயா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இவர்களுடன் வசித்துவரும் பலரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாகச் சாராயத்தைக் கடத்திவந்து இங்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனைத் தொடர்ந்து, நேற்று மெரினா கடற்கரைப் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர்கள் கையில் சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. சாராய பாட்டில்களை எடுத்துச் சென்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இன்னும் பல பாட்டில்களை மணலில் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட சாராய பாட்டில்கள்
கைப்பற்றப்பட்ட சாராய பாட்டில்கள்

இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த இடம் தோண்டப்பட்டது. இதில், தண்ணீர் பாட்டிலில் அடைத்துவைக்கப்பட்டிருந்த எட்டு பாட்டில்கள் சாராயம் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம், ஆந்திராவிலிருந்து சாராயம் விற்பனை செய்யும் நபர் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இன்னும் எங்கெல்லாம் சாராயம் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism