Published:Updated:

``என்னைப் பார்த்து குடிகாரப் பயலேன்னு சொன்னாங்க... கொன்னுட்டேன்" - அதிரவைத்த இரட்டைக் கொலையாளி

காடல்குடி காவல் நிலையம்

தூத்துக்குடியில் நள்ளிரவில் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் உட்பட இரண்டு பேரைக் கொலைசெய்த கொலையாளி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஒரு அரிவாளும், பைக்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.

``என்னைப் பார்த்து குடிகாரப் பயலேன்னு சொன்னாங்க... கொன்னுட்டேன்" - அதிரவைத்த இரட்டைக் கொலையாளி

தூத்துக்குடியில் நள்ளிரவில் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் உட்பட இரண்டு பேரைக் கொலைசெய்த கொலையாளி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஒரு அரிவாளும், பைக்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Published:Updated:
காடல்குடி காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ளது பூதலாபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா. இவரின் மனைவி ராஜாமணி. சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பிச்சையா உயிரிழந்துவிட்டார். இவர்களின் மூத்த மகன் பாண்டி திருமணமாகி வெளியூரில் இருக்கிறார். இரண்டாவது மகன் சேதுவுடன் வசித்துவந்தார் ராஜாமணி. ராஜாமணி அதே ஊரில் சிறிய பெட்டிக்கடை நடத்திவந்தார். கடந்த 27-ம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். 28-ம் தேதி அதிகாலையில் ரத்தக் காயங்களோடு அலறி அடித்துக்கொண்டு தனது பெட்டிக்கடையை நோக்கி ஓடி வந்திருக்கிறார்.

கொலைசெய்யப்பட்ட பொன்னுச்சாமி, ராஜாமணி அம்மாள்
கொலைசெய்யப்பட்ட பொன்னுச்சாமி, ராஜாமணி அம்மாள்

அந்தக் கடை அருகில் இரவில் கடைசியாக வரும் பேருந்தை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்த டிரைவரும் கண்டக்டரும் விழித்தனர். “காப்பாத்துங்க தம்பி...” எனச் சொல்லி பஸ்ஸுக்குள் ஏற முயன்றார் ராஜாமணி. அவரைக் கீழே இழுத்து அரிவாளால் வெட்டிவிட்டு கொலையாளி தப்பியோடினார். ராஜாமணி ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். கொலைச் சம்பவம் குறித்து டிரைவரும் கண்டக்டரும் காடல்குடி போலீஸாருக்குத் தகவல் கூறினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போலீஸார் வந்து ராஜாமணியின் வீட்டை ஆய்வுசெய்தனர். அப்போது, ராஜாமணியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டின் வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அந்த வீட்டில் வசித்துவந்த பொன்னுச்சாமி கட்டிலில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பொன்னுச்சாமியின் மனைவியும், மகளும் விருதுநகரில் வசித்துவருகின்றனர். சற்று பார்வைக்குறைபாடும், செவித்திறன் குறைபாடும் உடைய பொன்னுச்சாமி, முடிதிருத்தும் வேலை செய்துவந்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட இரட்டைக் கொலையாளி  சுப்பையா
கைதுசெய்யப்பட்ட இரட்டைக் கொலையாளி சுப்பையா

ஒரே நாள் நள்ளிரவில் அடுத்தடுத்த வீட்டில் நடந்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தின. இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் போலீஸாரையே அதிரச்செய்திருக்கிறது. “ராஜாமணி அம்மாள் நடத்திவந்த பெட்டிக்கடையிலதான் பீடி, சிகிரெட் வாங்குவேன். ’தண்ணி அடிச்சிட்டு கடைக்கு வராத குடிகாரப் பயலே’ன்னு சத்தம் போடுவார். நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. ரெண்டு நாளுக்கு முன்னால போதை கொஞ்சம் அதிகமாயகிடுச்சு. தள்ளாடிக்கிட்டே கடைக்குப் போனேன்.

‘எத்தனை தடவை சொல்றது... குடிச்சுட்டு இப்படிக் கடையில வந்து ரொம்ப பேசிக்கிட்டிருக்காத’ன்னு கோவத்துல ரொம்ப சத்தம் போட்டார். அந்த நேரத்துல கடைக்கு வந்திருந்த பொன்னுச்சாமியும் ‘குடிகாரப் பய என்ன சொன்னாலும் திருந்த மாட்டன்மா’ன்னு நக்கலாப் பேசுனாரு. எங்க மூணு பேருக்கும் வாக்குவாதம் வந்துச்சு. ஊருல இருக்குற சில பெரிய ஆளுங்களும் கடைக்கு வந்து என்னைச் சத்தம் போட்டு விரட்டிவிட்டாங்க. எல்லாரு முன்னாலயும் என்னை அவதூறாப் பேசி திட்டுனதுனால ரெண்டு பேரையும் கொலை செஞ்சுடணும்னு முடிவு செஞ்சேன். ராத்திரி 12 மணிக்கு மேல பொன்னுச்சாமி வீட்டுக்குப் போனேன். கட்டில்ல தூங்கிக்கிட்டிருந்தார்.

ராஜாமணி கொலை செய்யப்பட்ட இடம்
ராஜாமணி கொலை செய்யப்பட்ட இடம்

போர்வையால அவர் வாயை மூடி அரிவாளால வெட்டுனேன். அதுக்குப் பிறகு பக்கத்துல இருக்குற ராஜாமணி வீட்டுக்குள்ள போனேன். நான் நுழையுற சத்தம் கேட்டு லைட்டு போட்டார். என்னைப் பார்த்து கத்திக்கிட்டே வெளிய ஓடி பஸ்ஸுக்குள்ள ஏறப் போனார். அவரைக் கீழே தள்ளி வெட்டினேன்” எனச் சொல்லியிருக்கிறார். கொலையாளி பிடிப்பட்டது எப்படி என போலீஸாரிடம் பேசினோம். ”ராஜாமணியும் பொன்னுச்சாமியும் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டுத்தான் கொலை செய்யப்பட்டனர் என்பதை முதலில் உறுதி செய்தோம்.

இருவர் கொலை செய்யப்பட்ட விதமும், அரிவாள் வெட்டுகளும் ஒத்துப்போனதால் ஒருவரே இரண்டு கொலைகளையும் செய்திருக்க முடியும் என நினைத்தோம். இருவரின் வீடுகளிலும் எந்தப் பொருளும் திருடுபோகவில்லை. அதுவும் கஞ்சா, மது போதைக்கு அடிமையானவரே இப்படிக் கொடூரமாகக் கொலை செய்திருக்க முடியும். ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்ட பிறகு பஸ்ஸைவிட்டு வெளியே இறங்கிப் பார்த்த டிரைவரும், கண்டக்டரும் வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டியுடன் தலையில் தலைப்பாகை கட்டி காலை சாய்த்தபடியே ஓட்டமும் நடையுமாகச் சென்றவரைப் பார்த்துள்ளனர்.

காடல்குடி காவல் நிலையம்
காடல்குடி காவல் நிலையம்

அந்த ஊரில் காலைச் சாய்த்து நடப்பது யார் என விசாரித்தோம். சுப்பையாவைப் பற்றிச் சொன்னார்கள். எந்நேரமும் மதுபோதையில் இருக்கும் சுப்பையாவைவிட்டு மனைவி, மகள் பிரிந்து வாழ்வதாகச் சொன்னார்கள். அதிலும், மதுபோதையில் ராஜாமணியின் கடைக்குச் சென்று அடிக்கடி வாய்த் தகராறு செய்து வந்ததையும் ஊர்மக்கள் சொன்னார்கள். அந்த ஊரிலுள்ள சிலரின் வீடுகளில் இருக்கும் சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தோம். அதிகாலை நேரத்தில் காலைச் சாய்த்தபடி பின்னங்கையைக் கட்டிக்கொண்டு சுப்பையா வேகமாக நடந்து செல்வதை உறுதி செய்தோம். இதையடுத்தே அவரைத் தேடிச் சென்று கைதுசெய்தோம். மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றனர்.