Published:Updated:

சென்னை: தொழிலதிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது! - முன்விரோதம் காரணமா என போலீஸ் தீவிர விசாரணை

கைது

தொழிலதிபர் பாஸ்கரன் கொலை தொடர்பாக, கணேசன் என்பவரை போலீஸ் கைதுசெய்திருக்கிறது.

சென்னை: தொழிலதிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது! - முன்விரோதம் காரணமா என போலீஸ் தீவிர விசாரணை

தொழிலதிபர் பாஸ்கரன் கொலை தொடர்பாக, கணேசன் என்பவரை போலீஸ் கைதுசெய்திருக்கிறது.

Published:Updated:
கைது

சென்னை, சின்மயா நகர் கால்வாயில் நேற்று மர்மமான முறையில் ஒருவர் கொலைசெய்யப்பட்டு, சடலம் கருப்பு பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக, நேற்று அந்தப் பகுதியிலிருந்த தூய்மைப் பணியாளர்கள் போலீஸுக்குத் தகவலளிக்க, போலீஸாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சடலம்
சடலம்

அதைத் தொடர்ந்து விசாரணையில் கொலைசெய்யப்பட்டவர், பிரபல தொழிலதிபர் பாஸ்கரன் எனத் தெரியவந்தது. பின்னர் இது குறித்து நேற்று பேசிய போலீஸார், ``நேற்று முன்தினம் வீட்டைவிட்டுக் கிளம்பிய பாஸ்கரன், இரவு வீடு திரும்பாததால் அவரின் மகன் தன்னுடைய தந்தை காணவில்லை எனப் புகாரளித்திருந்தார். இந்த நிலையில்தான், பிஸாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் பாஸ்கரன் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் காரும் அந்தப் பகுதியில் தனியாக நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தோம். மேலும் பாஸ்கரனை, கை கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணிவைத்து, தலையில் அடித்த காயங்கள் இருந்தன. கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளமும் இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தனர்.

கொலை செய்யப்பட்ட பாஸ்கரன்
கொலை செய்யப்பட்ட பாஸ்கரன்

மேலும், பாஸ்கரன் கொலைசெய்ப்பட்ட இரவன்று அவரின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி இரண்டு முறை பணம் எடுக்கப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக் காட்சிகளைவைத்து, கொலையாளி யார் என போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டது.

இந்த நிலையில், பாஸ்கரன் கொலை தொடர்பாக, அவரின் கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து சற்று தொலைவிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த கணேசன் என்பவரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

கைது
கைது

இவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்குத் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில், பாஸ்கரன் கொலைசெய்யப்பட்ட அன்று, கணேசன் அவசர அவசரமாகக் கதவைச் சாத்திக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்திருப்பது பதிவாகியிருக்கிறது. கூலிப்படையினரால் பாஸ்கரன் கடத்தப்பட்டு, அந்த வீட்டுக்குள் அடைத்துவைத்துக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் கணேசன் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாகக் கொலைசெய்யப்பட்டாரா என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.