Published:Updated:

மதுரை: `பயம் இல்லையா... பணத்தை எடுங்க!’ - சிக்கிய போலி வணிகவரித்துறை அதிகாரிகள்

போலி நபர்கள்
போலி நபர்கள்

வணிகவரித்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, பணம் பறிக்க முயன்ற மூவரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ ராஜா, வயது 55. இவர் கடந்த ஒருவருடமாக, ஆண்டாள் கொட்டாரம் என்ற இடத்தில், நெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை கடைகளைக்கு விற்பனை செய்யும் ஏஜென்சி வைத்து நடத்திவருகிறார். இந்நிலையில், ஏஜென்சி வந்த மூவர், தாங்கள் வணிகவரித்துறை அதிகாரிகள் எனக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளனர்.

தொடர்ந்து, ஏஜென்சியின் கணக்கு விவரங்களைப் பார்க்க வேண்டும் என மூவரும் கூறியுள்ளனர். அவர்கள் பேசியதில் சந்தேகமடைந்த கேசவராஜா, `நான் சரியாக வரியைக் கட்டிவருகிறேன். முறையாகத் தொழில் நடத்திவருகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

போலி நகர்கள்
போலி நகர்கள்
`கொரோனா வார்டுகளில் கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம்’ - அசத்திய மதுரை பொறியாளர்

இதைக் கேட்டு கடுப்பான அந்த மூவரும், `எங்களை யார் என்று நினைத்தீர்கள்... வணிகவரித்துறை அதிகாரிகள் என்று கூட பயம் இல்லையா... சரியாக வணிகவரி கட்டவில்லை எனக் கிடைத்த தகவலால்தான் வந்தோம். பணம் கொடு... இல்லையென்றால் நடக்குறதே வேற’ என மிரட்டியுள்ளனர். இதில், மேலும் சந்தேகமடைந்த கேசவராஜா, மூவரையும் ஏஜென்சியில் அமர வைத்து பேச்சுக்கொடுத்து, உள்ளூர் மக்கள் உதவியுடன், கருப்பாயூரணி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

போலி நபர்கள்
போலி நபர்கள்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கொடுத்துள்ளனர் அந்த மூவரும். தொடர்ந்து மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஒருவர் வணிகவரித்துறையில் சூப்பிரண்டாக இருந்து ஓய்வுபெற்ற முத்துக்குமார் (வயது 60) என்றும், மற்றொருவர் வணிகவரித்துறையில் அலுவலக உதவியாளராக இருந்து ஓய்வுபெற்ற அசோக்குமார் (வயது 62) என்றும், இவர்களுக்கு உதவியாக சந்தானம் என்ற நபரும் உடன் வந்ததும். தங்களது பழைய வணிகவரித்துறை அடையாள அட்டையைப் பணம் பறிக்க பயன்படுத்தியதும் தெரியவந்தது.

கேசவராஜாவின் புகார் பெற்ற கருப்பாயூரணி போலீஸார், மூவரையும் கைது செய்தனர். இதே போல, வேறு எங்கெல்லாம் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வேறு ஏதும் காவல்நிலையங்களில் இவர்கள் மீது வழக்கு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்துவருகிறார்கள் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு