Published:Updated:

வங்கிக் கொள்ளை; இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது... நகைகளை உருக்க வாங்கப்பட்ட மெஷின்! - பகீர் தகவல்

அமல்ராஜ் கைது

சென்னை அரும்பாக்கத்தில் நடந்த வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

வங்கிக் கொள்ளை; இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது... நகைகளை உருக்க வாங்கப்பட்ட மெஷின்! - பகீர் தகவல்

சென்னை அரும்பாக்கத்தில் நடந்த வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
அமல்ராஜ் கைது

சென்னை, அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 13-ம் தேதி பட்டப்பகலில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வங்கியில் பணியாற்றிய ஊழியர்களைக் கட்டிப்போட்டும், குளிர்பானத்தில் மயங்க மருந்து கொடுத்தும் இந்தக் கொள்ளை நடந்ததாக தகவல்கள் வெளியாகின. வங்கிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலாளர் சுரேஷ், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். கமிஷனர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி மேற்பார்வையில் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை

விசாரணையில் அதே வங்கிக் கிளையில் பணியாற்றும் சென்னை பாடியைச் சேர்ந்த முருகன் என்பவன்தான் கொள்ளைச் சம்வத்தில் மாஸ்டர் மைன்ட்டாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முருகன், அவரின் நண்பர்கள், கூட்டாளிகளான பாலாஜி, சந்தோஷ், சூர்யா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் கைதான சந்தோஷின் உறவினர் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சந்தோஷ், இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவரின் வீட்டிலிருந்து 3.7 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மறைக்க உதவியதற்காக இன்ஸ்பெக்டர் அமல்ராஜை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். அதே போல கோவையில் நகைக் கடை நடத்திவரும் ஸ்ரீவத்சவ் என்பவரையும் போலீஸார் கைதுசெய்தனர். இவரிடம் கொள்ளை வழக்கில் கைதான சூர்யா, தங்க நகைகளைக் கொடுத்து உருக்கி அதை தங்கக் கட்டிகளாக மாற்ற திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக கொள்ளை கும்பல் தங்கத்தை உருக்கும் இயந்திரமும் வாங்கி வைத்திருந்தது. அதையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

முருகன்
முருகன்

இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் கமிஷனர் அன்பு கூறுகையில், ``அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளைப் போனதாக வங்கி மேலாளர் புகாரளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்தி முருகன் உட்பட 7 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். இதில் கடந்த 15-ம் தேதி சந்தோஷ் என்பவரிடமிருந்து 15.951 கிலோ தங்க நகைகள் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திலிருந்து பறிமுதல் செய்திருக்கிறோம். 15-ம் தேதி பாலாஜியிடமிருந்து 63 கிராம் தங்க நகைகளும் பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தோம்.

18-ம் தேதி சூர்யா என்பவரிடமிருந்து 8.827 கிலோ தங்க நகைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். 18-ம் தேதி செந்திலிடமிருந்து கார், தங்க நகைகளை உருக்கும் இயந்திரம், 80 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். 18-ம் தேதி முருகனிடமிருந்து 373 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்தோம். 17-ம் தேதி இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடமிருந்து 3.590 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்திருக்கிறோம். 18-ம் தேதி சந்தோஷின் பாட்டி வீட்டிலிருந்து இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கொடுத்த தகவலின்படி 2.656 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்திருக்கிறோம். 19-ம் தேதி பாலாஜியிடமிருந்து 100 கிராமும் ஸ்ரீவத்சாவிடமிருந்து 63 கிராம் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆக மொத்தம் 31.700 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துவிட்டோம். இந்த வழக்கு தொடர்பாக இன்னும் சிலரிடம் விசாரணை நடந்துவருகிறது."

வங்கி கொள்ளை
வங்கி கொள்ளை

தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தபோது, ``கொள்ளை வழக்கில் கைதானவர்கள் கடந்த பத்து நாள்களாக திட்டமிட்டு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். வங்கிக்கு மூன்று பேர் வந்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு பல்லாவரத்தில் உள்ள லாட்ஜூக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு ஏற்கெனவே திட்டமிட்டப்படி தங்க நகைகளை உருக்கியிருக்கின்றனர். அப்போது புகை அதிகளவில் வந்ததால் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டு நகைகளை பிரித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த வழக்கில் கொள்ளைச் சம்பவம் குறித்து முருகன், சந்தோஷின் மனைவிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. கொள்ளை வழக்கில் ஒருவர் காவல் நிலையத்தில் சிக்கினாலும் அவரை தலைமறைவாக இருக்கும் மற்றவர்களில் யாராவது ஒருவர் ஜாமீனில் எடுக்க வேண்டும். இதுதான் கொள்ளையர்களின் திட்டமிட்டமாக இருந்திருக்கிறது. ஆனால் எங்களிடம் அடுத்தடுத்து அனைவரும் சிக்கிக்கொண்டனர்" என்றனர்.