Published:Updated:

விபத்து இழப்பீடு தொகையில் பங்கு கேட்டதாகப் புகார்-இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் பின்னணி

இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட்

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டிலிருக்கும் இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விபத்து இழப்பீடு தொகையில் பங்கு கேட்டதாகப் புகார்-இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் பின்னணி

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டிலிருக்கும் இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட்

குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சென்னை, தாம்பரத்தில் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதோடு இடமாற்றம் செய்யப்படுவது தொடர்கதையாகியிருக்கிறது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டிலிருக்கும் இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தார். இவர்மீது தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் விசாரணை நடத்த தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் ஜோஸ் தங்கையாவுக்கு உத்தரவிட்டார்.

காவல் ஆணையர் அமல்ராஜ்
காவல் ஆணையர் அமல்ராஜ்

இதையடுத்து துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை கமிஷனர் அமல்ராஜுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராணி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் தரப்பில், ``பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ராணி, பாதிக்கப்பட்டவர்களிடம் குறிப்பிட்ட ஒரு வழக்கறிஞரைச் சந்திக்கும்படி சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். அந்த வழக்கறிஞர் தொடர்புடைய வழக்கறிஞர்கள்தான், இன்ஸ்பெக்டர் ராணி பதிவுசெய்த வழக்குகளுக்கு நீதிமன்றங்களில் ஆஜராகி வழக்கை நடத்தியிருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ராணி கூறும் வழக்கறிஞரை வழக்கில் தொடர்புடையவர்கள் சந்திக்காத பட்சத்தில் அந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் வந்தது. அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்ததாக விபத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெறும்போது குறிப்பிட்ட தொகையை ராணி தரப்பில் லஞ்சமாகப் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக விசாரணையும் நடந்தது. மேலும், அரசு வழங்கிய போலீஸ் வாகனத்துக்கு இன்ஸ்பெக்டர் ராணி, தனிப்பட்ட முறையில் பர்சனல் டிரைவரை நியமித்ததாகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்" என்றனர்.

இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்
இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அடுத்து சரித்திரப் பதிவேடு குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்காத காரணத்துக்காக அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் இடமாற்றம் செய்யப்பட்டார். மூன்றாவதாக நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரோகிணிமீது, நகைக்கடை ஒன்றில் மாமூல் கேட்டதாகப் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து அவரும் இடம் மாற்றப்பட்டிருக்கிறார். நான்காவதாக தற்போது இன்ஸ்பெக்டர் ராணிமீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் சர்ச்சையில் சிக்கிவருவது சென்னை, தாம்பரம் காவல்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.