வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரே சிக்னலில் பென்சில், பேனா விற்றுவந்த 13 வயது அப்பாவிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த படுபாதகச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் நடைபெற்றுவந்த இத்தகைய கேடுகெட்ட காட்டுமிராண்டித்தனம், இப்போது தமிழகத்திலும் அரங்கேற ஆரம்பித்திருப்பது மொத்த மக்களையும் பதறவைத்திருக்கிறது. இந்தக் கொடூரத்தை அந்தக் காவல் ஆய்வாளர், பா.ஜ.க பிரமுகர் ஒருவருடன் சேர்ந்து அரங்கேற்றியிருப்பதுதான் கொடுமையின் உச்சம்!

சென்னை, கோவளம் தர்கா பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், போக்குவரத்து சிக்னலில் பென்சில், பேனா, ரைம்ஸ் புத்தகங்களை விற்று, தனது குடும்பத்துக்கு ஒத்தாசையாக இருந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் அந்தச் சிறுமி பூப்பெய்தியிருக்கிறார். ‘ஒண்டுவதற்கு ஒழுங்கான குடிசைகூட இல்லாத இடத்தில், வயதுக்குவந்த மகளை உடன்வைத்திருந்தால், பலரின் கழுகுக் கண்களுக்கு இரையாக வேண்டியிருக்கும்’ என்று முடிவெடுத்த அந்தத் தாய், தன் சகோதரி மகளான ஷாகிதா பானுவிடம் உதவி கேட்டிருக்கிறார். ‘‘அதுக்கென்ன பெரியம்மா... நீங்க பாப்பாவை அனுப்பிவையுங்க. நான் பார்த்துக்குறேன்’’ என்று ஷாகிதா பானு நம்பிக்கையுடன் கூறியதால், தண்டையார்பேட்டையிலிருக்கும் ஷாகிதா பானுவின் வீட்டுக்கு மகளை அனுப்பி வைத்திருக்கிறார் அந்தத் தாய். அதன் பிறகுதான் விபரீதம் ஆரம்பித்திருக்கிறது.

ஷாகிதா பானுவின் கணவன் மதன்குமார் ஒரு பாலியல் புரோக்கர். 13 வயது சிறுமியைப் பார்த்தவுடனேயே அவனது கிரிமினல் புத்தி குறுக்குவழியில் யோசித்திருக்கிறது. சிறுமியை வைத்து எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறான் மதன்குமார். அந்தத் திட்டத்தில் மதன்குமாரின் சகோதரி சந்தியாவும், அவரின் கணவர் கார்த்திக்கும் சேர்ந்துகொள்ள, விறுவிறுவென கஸ்டமர்களைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தச் சிறுமியிடம், ‘‘வெறும் பத்து நிமிஷம்தான். கண்ணை மூடிட்டு இருந்தேன்னா, பணம் கொட்டும். நாம சந்தோஷமாக வாழணும்னா இதெல்லாம் தப்பே இல்லை. நீ சம்மதிக்கலைன்னாலும், எங்களுக்குக் கவலையில்லை... உன்னை எப்படி வழிக்குக் கொண்டுவரணும்னு தெரியும்’’ என்று மிரட்டியிருக்கிறார்கள்.

பாலியல் தொழில் செய்வதற்காக தண்டையார் பேட்டையில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்த மதன்குமார், பாலியல் புரோக்கர்களான வனிதா, விஜயா, மகேஸ்வரி ஆகியோரின் வீடுகளுக்குச் சிறுமியை அனுப்பி வைத்திருக்கிறான். அதற்கு பதிலாக அந்த புரோக்கர்களிடம் இருக்கும் பெண்கள் மதன்குமாரின் பிசினஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான், தன் மகள் சீரழிக்கப்படும் தகவல் கோவளத்திலிருக்கும் அவரின் அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. பதறிப்போனவர், நவம்பர் 10-ம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், ஆய்வாளர் பிரியதர்ஷினி தலைமையில் தனிப்படை அமைத்து, சிறுமியைத் தேடியிருக்கிறார்கள்.

மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஸ்வரி, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய எட்டுப் பேரைக் கைதுசெய்த போலீஸ், 13 வயது சிறுமியையும் மீட்டிருக்கிறார்கள். விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறுமியிடம் ஆய்வாளர் பிரியதர்ஷினி விசாரித்தபோது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர் கொட்டியிருக்கிறார்.

இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘அந்தச் சின்னப் பொண்ணைப் பார்த்தாலே மனசெல்லாம் பதறுதுங்க. சரியான சாப்பாடு இல்லாம கண்ணெல்லாம் உள்ளே போய், பூஞ்சையா இருக்குங்க அது. அதெல்லாம்கூட பார்க்காம, ‘பிரியாணி வாங்கித் தர்றேன். முந்திரிப் பருப்பு வாங்கித் தர்றேன்’னெல்லாம் சொல்லி ஏகப்பட்ட புரோக்கர்கள்கிட்ட அனுப்பியிருக்கானுங்க படுபாவிங்க. அஞ்சு நாள் பேக்கேஜ், ஒரு வாரம் பேக்கேஜ்னு வயசான கிழவன்களைவிட்டு சீரழிச்சிருக்கானுங்க.

இதுல மதன்குமாரோட சகோதரி சந்தியாவுக்கு நெருக்கமான ராஜேந்திரன்ங்கிறவன், பலமுறை அந்த சின்னப்புள்ளையை அவனோட ஆபீஸுக்கே கூட்டிட்டுப் போயிருக்கான். காளான் பிசினஸ் செய்யுற ராஜேந்திரன், வடசென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க-வுல செயற்குழு உறுப்பினரா இருக்குறதுதான் கொடுமை. வண்ணாரப் பேட்டையில இருக்குற அவனோட ஆபீஸ்லவெச்சு தான் பலரும் அந்தச் சிறுமியை சீரழிச்சிருக்கானுங்க” என்றவர்கள், அடுத்து சொன்ன விஷயம்தான் தூக்கிவாரிப்போட்டது!

“எண்ணூர் போலீஸ் ஸ்டேஷன் லா அண்ட் ஆர்டர் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும், ராஜேந்திரனும் பதினஞ்சு வருஷ ஃப்ரெண்டுங்க. எந்தக் காரியமா இருந்தாலும் சேர்ந்துதான் செய்வானுங்க. ராஜேந்திரன் அந்தக் குழந்தையை அவனோட ஆபீஸுக்குக் கூட்டிட்டு வர்றப்பல்லாம் புகழேந்தியும் வந்துடுவான். ரெண்டு பேரும் மாறி மாறி அந்தப் புள்ளையைச் சீரழிச்சிருக்கானுங்க. இந்தக் கொடூரம் பலமுறை நடந்திருக்கு. எப்போதும் சரக்கும் சிகரெட்டுமா இருக்குறவனுங்க, வலி தாங்க முடியாம அந்தப் புள்ளை கதறி அழறப்பல்லாம், ‘வலிச்சா நீயும் கொஞ்சம் குடி’னு சொல்லி சிரிச்சு எக்காளமிட்டிருக் கானுங்க. நாங்க விசாரிக்குற வரைக்கும், தன்னைச் சீரழிச்சது ஒரு போலீஸ் அதிகாரிதான்னு அந்தப் புள்ளைக்குத் தெரியாது.

இன்ஸ்பெக்டர் புகழேந்திகிட்ட நாங்க விசாரிச்சப்ப, அவன் எதையும் ஒத்துக்கலை. ஆனா, அவனோட ஃப்ரெண்ட் ராஜேந்திரன் கொடுத்த வாக்குமூலத்தைவெச்சும் அந்தச் சிறுமி கொடுத்த தகவலின்படியும் புகழேந்தியைக் கைது செஞ்சிருக்கோம். புகழேந்தி, ராஜேந்திரன் உட்பட 13 பேர் மேல போக்சோ சட்டத்துல நடவடிக்கை எடுத்து ஜெயில்ல அடைச்சிருக்கோம். இந்த விவகாரத்துல வேற யாராச்சும் சம்பந்தப்பட்டிருக் காங்களான்னும் விசாரிச்சுக்கிட்டு வர்றோம். இன்னும் சிலரையும் கைதுசெய்ய வாய்ப்பிருக்கு’’ என்றார்கள்.

1999-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த புகழேந்தி கொடுங்கையூர், செங்குன்றம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றியிருக்கிறார். எண்ணூர் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றிவரும் புகழேந்தி மீது இன்னும் பல புகார்கள் குவிகின்றன. எண்ணூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை படுஜோராக நடப்பதற்கு இவரது தாராள ஆசி இருந்திருக்கிறது. கஞ்சா கும்பல்கள் இடையிலான தகராறில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு கொலையும் நடந்தது.

மேலும், கடந்த அக்டோபர் மாதம், திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றும் உதவி செயற்பொறியாளர் ஒருவரின் ஆபாச ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர்மீது நடவடிக்கை எடுக்கும்படி மாதர் சங்கம், கம்யூனிஸ்ட் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உதவி செயற் பொறியாளர்மீது எண்ணூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறி, வழக்கை ஓரங்கட்டி விட்டார் புகழேந்தி. ‘சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் தற்போதும் பணியில்தான் இருக்கிறார். அன்றாடம் அலுவலகம் வந்து செல்கிறார். ஆனால், போலீஸ் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. இதற்குக் காரணமே ஆய்வாளர் புகழேந்திதான்’’ என்று கொதிக்கிறார்கள் மாதர் சங்கத்தினர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘புகார் அளித்த சிறுமியின் தாய்க்கும், அவரின் குழந்தைகளுக்கும் நிரந்தர வாழ்வாதாரம் எதுவுமில்லை. சிறுமியின் உடலும் மனமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அரசுக் காப்பகத்தில் அவர்களைத் தங்க வைத்திருக்கிறோம்” என்றார்.

ஒவ்வொரு முறையும் தன்னை காமுகன்கள் சீரழிக்கும்போதெல்லாம், ‘போலீஸுக்குத் தெரிஞ்சா இவங்களையெல்லாம் சுட்டுக் கொன்னுடுவாங்க’ என்று அந்த அப்பாவிச் சிறுமியின் மனம் ஒருவேளை வெள்ளந்தியாகத் துடிதுடித்திருக்கலாம்... சாத்தான்குளத்தில் இரட்டைக்கொலை, லாக்கப்களில் தொடரும் மரணங்கள், இப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை... இனி என்னென்ன அவமானங் களைச் சுமக்கவிருக்கிறதோ தமிழகக் காவல்துறை! காவல்துறையை நீங்கள் கட்டிக்காக்கும் லட்சணம் இதுதானா மிஸ்டர் எடப்பாடி அவர்களே?