Published:Updated:

நெல்லை: நள்ளிரவில் தோட்டத் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்! - தலையைத் துண்டித்த கும்பல்

தொழிலாளி கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீஸார்
தொழிலாளி கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீஸார்

தோட்டத்தில் தொழிலாளியாக இருக்கும் ஒருவர் நள்ளிரவில் பைக்கில் வெளியே சென்றபோது வழிமறித்த கும்பல், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொன்றதுடன் அவரது தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றதால் பரபரப்பு நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடுவூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இருக்கிறது. அதனருகே நேற்று இரவு நேரத்தில் ஒருவர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு பதுங்கியிருந்த கும்பல் அவரை வழிமறித்துத் தாக்கியதுடன், கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.

கொலை நடந்த இடத்தில் தடயவியல் ஆய்வு
கொலை நடந்த இடத்தில் தடயவியல் ஆய்வு

பைக்கில் சென்ற தொழிலாளியைக் கொலை செய்த கும்பல் ஆத்திரம் தணியாமல் அவரது தலையைத் துண்டித்து கையோடு எடுத்துச் சென்றுவிட்டது. உடல் மட்டும் காட்டுப் பகுதியில் கிடந்திருக்கிறது. அந்த வழியாகச் சென்றவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு அச்சத்தில் ஓடிவிட்டனர்.

காட்டுப் பகுதியில் நடந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

கொலையான சங்கர சுப்பிரமணியன்
கொலையான சங்கர சுப்பிரமணியன்

உயிரிழந்தவரின் உடலை போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகள் அருகிலுள்ள காட்டுக்குள் தலையை வீசிவிட்டுச் சென்றிருக்கக்கூடும் என போலீஸார் தேடினார்கள். ஆனால் தலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயிரிழந்தவர் பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் கீழச்செவல் நயினார்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சங்கர சுப்பிரமணியன் (38) என்பது தெரியவந்தது. அவர் அந்தப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துவந்த விவரமும் தெரியவந்தது.

விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகள்
விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகள்

தொழிலாளியின் கொலைக்கான காரணம் குறித்து எந்த விவரமும் கிடைக்கவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயவியல் ஆய்வு செய்யப்பட்டது. மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டு விசாரணை நடந்தது. முன் விரோதம் காரணமாகக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு