Published:Updated:

சென்னை: ``குழந்தையை அடக்கம்செய்ய பணமில்லை..!" - குப்பைத் தொட்டியில் சடலத்தை வீசிய தந்தை

குழந்தை

சென்னை திருவல்லிக்கேணியில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை அடக்கம்செய்ய பணமில்லாததால் குப்பைத் தொட்டியில் வீசிய தந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சென்னை: ``குழந்தையை அடக்கம்செய்ய பணமில்லை..!" - குப்பைத் தொட்டியில் சடலத்தை வீசிய தந்தை

சென்னை திருவல்லிக்கேணியில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை அடக்கம்செய்ய பணமில்லாததால் குப்பைத் தொட்டியில் வீசிய தந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

Published:Updated:
குழந்தை

சென்னை திருவல்லிக்கேணி, சி.என்.கே.சாலையில் உள்ள குப்பைத் தொட்டி அருகே நாய்கள் கூட்டமாக நின்றுக்கொண்டிருந்தன. அதில் சில நாய்கள் கட்டை பை ஒன்றைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தன. அந்த வழியாகச் சென்ற பலர் அந்தக் காட்சியைப் பார்த்து கடந்துசென்றனர். வேறுசிலர் வேடிக்கைப் பார்த்தனர். என்னவென்று ஒரு சிலர் மட்டும் நாய்களை விரட்டிவிட்டு கட்டைப் பைக்குள் என்ன இருக்கிறது என்று பாரத்தனர். அப்போது பச்சிளம் குழந்தை ஒன்று இறந்தநிலையில் இருந்தது. உடனடியாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம்
குழந்தையின் சடலம்

உடனடியாக திருவல்லிக்கேணி போலீஸ் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது இளைஞர் ஒருவர், கட்டை பையை குப்பைத் தொட்டியில் வீசிச் செல்லும் காட்சியைப் பார்த்த போலீஸார் அந்தக் கட்டைப் பையை ஆய்வுசெய்தனர். அதில் உள்ள அடையாளங்களைவைத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீஸார் விசாரித்தனர். அப்போது மருத்துவமனை வெளியில் பைகளை விற்றுக் கொண்டிருந்தவர் சில தினங்களுக்கு முன்பு, மருத்துவமனையிலிருந்து வந்த இளைஞர் ஒருவர் இந்தப் பையை வாங்கிச் சென்றார் எனத் தகவல் கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது கவிதா என்ற பெண்ணுக்கு குறைபிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது தெரியவந்தது. உடனடியாக கவிதா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குச் சென்ற போலீஸார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர், `குழந்தை இறந்து பிறந்தது உண்மைதான், ஆனால் அதை அடக்கம் செய்ய கணவர் தனுஷிடம் கொடுத்தேன்' என்று அப்பாவியாகக் கூறினார். இதையடுத்து தனுஷ் குடியிருக்கும் மெரினா கண்ணகி சிலை, பிளாட்பாரத்துக்கு போலீஸார் சென்றனர். அங்கு மது போதையில் தனுஷ் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர், தான் குப்பைத் தொட்டியில் குழந்தையை வீசியதை ஒப்புக்கொண்டார்.

குழந்தையின் சடலம்
குழந்தையின் சடலம்

அதோடு தன்னுடைய கண்ணீர் கதையையும் போலீஸாரிடம் தெரிவித்து காவல்துறையினரை கண்கலங்க வைத்தார்.

இது குறித்து உதவி கமிஷனர் பாஸ்கரிடம் பேசினோம். ``வேலூரைச் சேர்ந்த தனுஷுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. அவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டது. அதனால் சோகத்திலிருந்த தனுஷ், வேலைத் தேடி சென்னை வந்தார். முதல் மனைவியும் இறந்ததால் செல்போன் திருட்டு உள்ளிட்ட சில வழக்குகளில் தனுஷ் சிக்கினார். சிறையிலிருந்து வெளியில்வந்த தனுஷ், மெரினா கடற்கரையில் தங்கியிருந்தபோது கவிதாவைச் சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடாத தனுஷ் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலைப்பார்த்து வந்திருக்கிறார். இந்தச் சமயத்தில் கவிதா கர்ப்பமடைந்திருக்கிறார். அவருக்குக் குறைமாதத்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் கவிதாவை தனுஷ் சேர்த்தார். அப்போது அவருக்கு இறந்து குழந்தைப் பிறந்தது. அதை அடக்கம் செய்ய பணமில்லாததால் கட்டை பையை வாங்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார். இதையடுத்து பிணவறையிலிருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, காக்கும் கரங்கள் என்ற அமைப்பு மூலம் உறவுகள் என்ற என்.ஜி.ஓ மூலம் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் குழந்தையை தகனம்செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். தனுஷுக்கு அறிவுரைகளைக்கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்" என்றார்.

மனித நேயத்துடன் செயல்பட்ட திருவல்லிக்கேணி போலீஸாரை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.