Published:Updated:

உடைக்கப்படாத பூட்டு; 200 சவரன் நகை கொள்ளை! - போலீஸ் தீவிர விசாரணை!

நகை கொள்ளை நடந்த வீடு
நகை கொள்ளை நடந்த வீடு

குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றுபவரின் வீட்டில் ஒன்றரை கிலோ நகை கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை புறநகர்ப் பகுதியான மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்துவருபவர் பார்த்தசாரதி. குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்ததாரராக இருக்கிறார். வீட்டில் அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே வசித்துவருகிறார்கள். சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக நகை மற்றும் பணம் தேவைப்பட்டதால் வீட்டில் நகை வைக்கப்பட்டிருந்த பீரோவைத் திறந்திருக்கிறார்.

நெல்லை: இரவில் போலீஸ்; பகலில் கொள்ளை!- வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய ஏட்டு சிக்கிய பின்னணி

பீரோவிலிருந்த 200 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டில் பல இடங்களிலும் தேடியிருக்கிறார். ஆனால் எங்கும் நகையும் பணமும் இல்லாததால், பணம், நகை கொள்ளை போனது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார்.

வீட்டிலிருந்த பீரோவின் கதவு உடைக்கப்படவில்லை. அதனால் எப்போது நகை, பணம் கொள்ளைபோனது என்பது அவருக்கே தெரியவில்லை. அதனால் போலீஸாருக்கும் எங்கிருந்து விசாரணையைத் தொடங்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு 75 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

200 சவரன் நகையைப் பறிகொடுத்த பார்த்தசாரதி
200 சவரன் நகையைப் பறிகொடுத்த பார்த்தசாரதி

இருப்பினும் பார்த்தசாரதியின் வீட்டுக்குச் சென்ற கைரேகைப் பிரிவு போலீஸார், அங்கிருந்த கைரேகைகளைப் பதிவு செய்துகொண்டனர். மேலும், அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும் நபர்கள் குறித்தும் விசாரித்துவருகிறார்கள். உண்மையிலேயே ரொக்கப் பணம் மற்றும் நகை கொள்ளை போனதா அல்லது உறவினர்கள் யாரேனும் எடுத்துக்கொண்டார்களா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே, நெல்லை பரணி நகர் பகுதியிலும் இதே போன்ற கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதும் போலீஸாருக்குச் சவாலாக உள்ளது. அங்குள்ள சுரேஷ்குமார் என்பவர் தனது கடைகளில் வியாபாரமான 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை வீட்டில் வைத்திருந்திருக்கிறார். அந்தப் பணம் மாயமானது பற்றியும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

நெல்லை வங்கி அதிகாரி வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை! - பூட்டை உடைத்து துணிகரம்

சுரேஷ்குமாரின் வீட்டில் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் கடையில் வேலை செய்யும் ஏழு தொழிலாளர்களும் தங்கியிருக்கிறார்கள். அதனால் குடும்பத்தினர் மற்றும் வீட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு