Published:Updated:

சென்னை: மோதலான வாய்த் தகராறு; செங்கல்லால் அடித்து இளைஞர் கொலை! - போதையில் நடந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட பிரசாந்த்
கொலை செய்யப்பட்ட பிரசாந்த்

சென்னையில் இளைஞர் ஒருவர், பட்டப்பகலில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் (24). இவர் மின்சார ரயிலில் பாப்கான் விற்பனை செய்துவந்தார். இவர் நெமிலிச்சேரி ஏரிக்கரைப் பகுதியில் நண்பர்களோடு மது அருந்தியிருக்கிறார். அப்போது இன்னும் சிலரும் அங்கு மது அருந்தியுள்ளனர். போதையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு பிரசாந்த்தும், அவரின் நண்பர்களும் நெமிலிச்சேரி ஏரிக்கரையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.

 கொலை
கொலை

பிரசாந்த்தும் அவரின் நண்பர்களும் பட்டாபிராம் உழைப்பாளர் நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த கும்பல் மீண்டும் தகராறில் ஈடுபட்டிருக்கிறது. பின்னர் அந்தக் கும்பல் பிரசாந்த், அவரின் நண்பர்களை நோக்கிச் செங்கல்லை எடுத்து வீசியிருக்கிறது. அதில் பிரசாந்த்தின் தலையில் காயம் ஏறபட்டிருக்கிறது. பிரசாந்த்தின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தலையில் காயமடைந்த பிரசாந்த், தெருவில் கீழே விழுந்தார். ஆத்திரம் தீராத கும்பல் செங்கல்லை வீசி அவரைக் கொலை செய்தது. இது குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் உள்ளிட்ட போலீஸார் வந்தனர். அவர்கள் பிரசாந்த்தின் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக பிரசாந்த்தின் சடலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரசாந்த்தைக் கொலை செய்தவர்கள் யாரென்று பட்டாபிராம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பிரசாந்த்
பிரசாந்த்
வேலூர்: திருமணம் தாண்டிய உறவு; வரதட்சணைக் கொடுமை; கொலை மிரட்டல் - திமுக பிரமுகர் மீது மனைவி புகார்!

இது குறித்து போலீஸார் கூறுகையில் ``கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார் பிரசாந்த். நேற்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து பிரசாந்த் மது அருந்தியிருக்கிறார். அப்போது பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜித், அவரின் நண்பர்களுடன் பிரசாந்த்துக்குத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. `எங்கள் ஏரியாவில் நீங்கள் எப்படி மது அருந்தலாம்/’ என அஜித் கேட்டிருக்கிறார். அதற்கு பிரசாந்த், பதிலளித்திருக்கிறார். வாய்த் தகராறு மோதலாக மாறி கொலையில் முடிந்திருக்கிறது. பிரசாந்த்தின் நண்பர்கள் கூறிய தகவலின்படி அஜித் உட்பட இந்தக் கொலையில் தொடர்புடையவர்களைப் பிடித்து விசாரித்துவருகிறோம். பிரசாந்த்தின் நாக்கு தூண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அது தொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு