Published:Updated:

கொத்தடிமைகளாக வாத்து மேய்க்கச் சென்ற சிறுவர்கள்? - கொடூரமாகத் தாக்கிய இருவர்... என்ன நடந்தது?

திருவண்ணாமலை

வாத்துகளை மேய்ப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த 10, 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை இவர்கள் கொத்தடிமைகளாகவைத்து பயன்படுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது.

கொத்தடிமைகளாக வாத்து மேய்க்கச் சென்ற சிறுவர்கள்? - கொடூரமாகத் தாக்கிய இருவர்... என்ன நடந்தது?

வாத்துகளை மேய்ப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த 10, 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை இவர்கள் கொத்தடிமைகளாகவைத்து பயன்படுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
திருவண்ணாமலை

திருவண்ணாமலைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு சிறுவர்களைத் திட்டி, சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அங்கிருந்த சிலர், தாக்கியவர்களையும், தாக்கப்பட்ட சிறுவர்களையும் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் முருகேஷ், சிவா. இருவரும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வாத்து வியாபாரம் செய்துவருகின்றனராம்.

தாக்குதல்
தாக்குதல்
சித்தரிப்புப் படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாத்துகளை மேய்ப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை இவர்கள் கொத்தடிமைகளாக வைத்து பயன்படுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே வாத்துகளை மேய்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தச் சிறுவர்களை அந்த நபர்கள் அழைத்துவந்தனராம். இந்த நிலையில், அந்த சிறுவர்கள் இருவரும், அந்த நபர்களுக்குத் தெரியாமல் அங்கிருந்து தப்பி திருவண்ணாமலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதை அறிந்து சிறுவர்களை இரு சக்கர வாகனம் மூலம் தேடிய முருகேஷும் சிவாவும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இரு சிறுவர்களையும் பிடித்து அச்சுறுத்தி, சரமாரியாகத் தாக்கியுள்ளனர். நேற்று முழு ஊரடங்கு என்பதால் அங்கிருந்த சிலர் மட்டும் இவர்களைப் பிடித்து விசாரித்தபோது, சிறுவர்களைக் கொத்தடிமைகளாக அவர்கள் வைத்திருந்தது தெரியவந்ததாம். பின்னர், சிறுவர்கள் உட்பட நான்கு பேரும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ``இந்தச் சம்பவம் நடைபெற்றது உண்மைதான். சிறுவர்கள் இருவரும் பாதுகாப்பாக ஹோமில் உள்ளனர். சிறுவர்களைத் தாக்கிய இருவரையும் கஸ்டடியில் வைத்துள்ளோம். மேலும், இது குறித்து வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். வருவாய்த்துறையினர் சிறுவர்களிடம் உரிய விசாரணை நடத்திய பின்னர், அளிக்கப்படும் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

கொத்தடிமைகளாக இருந்து தப்பித்துவந்ததாகக் கூறப்படும் சிறுவர்கள், கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism