Published:Updated:

`சினிமா பாணியில் சேஸிங்; துப்பாக்கியைக் காட்டிய கொள்ளையர்கள்!’ - ஓசூரில் பரபரப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள்
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள்

கொள்ளையர்கள் ஜீப்பைத் திருடிச் சென்றதோடு, அதை மீட்கத் துரத்திச் சென்றவர்களைத் துப்பாக்கியைக் காட்டிச் சுட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகிலுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் (28). விவசாயியான இவருக்குச் சொந்தமாக பொலேரோ ஜீப் ஒன்று இருந்தது. கடந்த 26-ம் தேதி நள்ளிரவு ராகேஷின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலேரோ ஜீப்பை திருடிச் சென்றுள்ளனர். ஜீப் திருட்டுப்போனது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த ராகேஷ், ஓசூர் மத்திகிரி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

திருட்டுப்போன பொலிரோ ஜீப்
திருட்டுப்போன பொலிரோ ஜீப்

இந்த நிலையில், ராகேஷின் நண்பர்கள் சிலர், நேற்று எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கர்நாடக மாநிலத்திலுள்ள தர்மஸ்தலா கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது நெலமங்களா பகுதியில் ராகேஷின் திருட்டுப்போன பொலேரோ ஜீப் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்திருக்கிறது. அதைப் பார்த்ததும் உடனடியாக ராகேஷுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, ராகேஷ் பெங்களூரிலிருந்த தன்னுடைய உறவினர்களான நந்தகிஷோர், ஹரிஸ் ஆகிய இருவரிடமும் விஷயத்தைச் சொல்லி நெலமங்களா பகுதிக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

100 சவரன் தங்கம்; வைரம் கொள்ளை! -திருவாரூர் முருகனின் வலதுகரமான தினகரன், மனைவியோடு சிக்கியது எப்படி?

இருவரும் நெலமங்களா பகுதியில் ஜீப்பைத் தேடி அலைய, திருட்டுப்போன ஜீப்பை கொள்ளையர்கள் தும்கூர் சாலையில் ஓட்டிச் சென்றிருக்கின்றனர். அதைக் கண்ட, நந்தகிஷோர், ஹரிஸ் ஆகியோர் அந்த ஜீப்பை துரத்திச் சென்று பிடிக்க முயன்றிருக்கின்றனர். அந்த ஜீப்பை ஓவர்-டேக் செய்து குறுக்கே வழிமறிக்க முயன்றபோது, திடீரென ஜீப்பிலிருந்த கொள்ளையர்கள், அவர்கள் இருவரையும் கைத்துப்பாக்கியால் சுட முயன்றுள்ளனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் செல்போனில் புகைப்படம் எடுத்ததோடு, பின்னால் சென்றால் ஆபத்து என்று பயந்துகொண்டு நெலமங்களா காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, பெங்களூரு திரும்பியிருக்கின்றனர்.

ஜீப்பை சேஸ் செய்தபோது எடுக்கப்பட்ட படம்
ஜீப்பை சேஸ் செய்தபோது எடுக்கப்பட்ட படம்

இந்தத் தகவலை ராகேஷ் ஓசூர் மத்திகிரி போலீஸாரிடமும் தெரியப்படுத்தியிருக்கிறார். ஜீப்பைத் திருடிய கொள்ளையர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், ஏதாவது குற்றச் செயலுக்காக இந்த ஜீப்பை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொள்ளையர்கள் ஜீப்பை திருடிச் சென்றதோடு, அதை மீட்கத் துரத்திச் சென்றவர்களைத் துப்பாக்கியைக் காட்டி சுட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு