Published:Updated:

`ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் தைலக் காட்டில் சடலம்!' - போலீஸ் தீவிர விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே தைலக் காட்டில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு, நிர்வாண நிலையில் கிடந்த சடலத்தை மீட்ட போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஜி.ஆர்.கண்டிகை, பில்லாகுப்பம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பைப் பிரதான தொழிலாக வைத்துள்ள கிராம மக்கள் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை அதிகளவில் மேய்த்து வருகின்றனர். இந்நிலையில், பில்லாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள தைல மர காட்டிற்கு ஓட்டிச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இருள் சூழ ஆரம்பித்த நேரத்தில், தைல மர காட்டில் பயங்கர துர்நாற்றம் வீசியிருக்கிறது. முதலில், விலங்குகள் ஏதோ இறந்து துர்நாற்றம் வீசுவதாக நினைத்த அந்த பெண் பின்னர், அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்போது, அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று அங்கு இருந்திருக்கிறது.

பில்லாகுப்பம்
பில்லாகுப்பம்

அதைக் கண்டு, மிரண்டு போனவர் அங்கிருந்து ஆடுகளை அவசர கதியில் ஓட்டிக் கொண்டு கிராம மக்களிடம் விஷயத்தைக் கூறியிருக்கிறார். அதையடுத்து, தைலக் காட்டிற்குச் சென்று உறுதி செய்து கொண்ட கிராமத்து ஆண்கள் சிலர், உடனடியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இரவு நேரம் என்பதால் நேற்று காலை தைலக் காட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்த சிப்காட் போலீஸார், நிர்வாணமாக இருந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் தண்டவாளத்தில் துண்டு துண்டாகக் கிடந்த சடலம்; போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
ஆண் சடலம்
ஆண் சடலம்

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து சிப்காட் போலீஸாரிடம் விசாரித்தோம். "தைலக் காட்டில் சடலமாகக் கிடந்த நபருக்கு 45 வயது இருக்கும். உடல் அழுகிய நிலையிலும், நிர்வாணமாகவும் கிடந்ததால் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதே போல், சடலத்தின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. உடலின் இதர பாகங்களும் குதறப்பட்டிருக்கிறது. காட்டுப்பன்றிகள் அதிகளவில் இருக்கும் பகுதி என்பதால் அவை உடலைக் குதறியிருக்கலாம். சடலத்தின் கைகளில் ராக்கி கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. எனவே, உயிரிழந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதன் அடிப்படையில், மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து உடலை இந்த காட்டுப் பகுதியில் வீசியிருக்கக் கூடும் என்று நினைக்கிறோம். பிரேதப் பரிசோதனையின் முடிவில் விவரம் தெரிந்து விடும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு