Published:Updated:

பெண் எஸ்.பி பாலியல் வழக்கு: சாட்சி ஆவணங்கள் திடீர் மாயம்?!

பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சிக்கினார். அந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் மாயமாகியுள்ளன எனத் தகவல் வெளியாகி உள்ளது/

பெண் எஸ்.பி பாலியல் வழக்கு: சாட்சி ஆவணங்கள் திடீர் மாயம்?!

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சிக்கினார். அந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் மாயமாகியுள்ளன எனத் தகவல் வெளியாகி உள்ளது/

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் முதல்வரின் சுற்றுப்பயண பாதுகாப்புக்குச் சென்றிருந்தார். அப்போது மாவட்ட எஸ்.பி பதவியிலிருந்த இளம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பாக இளம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சம்பந்தப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்
விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்
தே.சிலம்பரசன்

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. புகாரளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிந்த நிலையில் அவர், மத்திய அரசு பணிக்குச் சென்றுவிட்டார். இந்த வழக்குக்குத் தேவையான ஆதாரங்களை போலீஸார் சேகரித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர்.

அதில் ஒரு ஆதாரமாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் தொல்லைக் குறித்து பெண் எஸ்.பி புகாரளிக்க காரில் சென்னை நோக்கி வந்தபோது, செங்கல்பட்டு மாவட்டத்தில் அவரை இன்னொரு ஐ.பி.எஸ் அதிகாரி வழிமறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான ஆதாரமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டோல்கேட்டில் உள்ள சி.சி.டி.வி-யில் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதை போலீஸார், கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர்.

இந்த நிலையில் 18-8-2022-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பரனூர் ஆகிய சுங்கச்சாவடி ஊழியர்களிடம் சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்தது. பின்னர் இந்த வழக்கை நீதிபதி புஷ்பாராணி 25-08-2022-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். விசாரணையின் போது, படிவம் 95 மற்றும் புகைப்படங்கள்(டோல்கேட் சிசிடிவி காட்சிகள்) வழக்குப்பதிவில் காணவில்லை. எனவே அதை அடுத்த விசாரணைக்குள் கண்டறிந்து சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். வழக்கு விசாரணை தொடர்பான சாட்சி ஆவணங்களை காணவில்லை என்ற தகவலால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது..