Published:Updated:

அண்ணன் மனைவிக்குத் தொந்தரவு! - கண்டிக்கப் போன இடத்தில் இருவரைக் கத்தியால் குத்திய காவலர்

 கரூர்
கரூர்

அண்ணன் மனைவிக்கு போன் மூலம் பாலியல் தொந்தரவு தந்த அலாவுதீனை, ஹனீஃப் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனால், அலாவுதீன் தொடர்ந்து தொந்தரவு தந்து வந்தாராம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அண்ணன் மனைவிக்கு செல்போனில் தொந்தரவு கொடுத்தத விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், இருவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய காவலர் மீது வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஹனீஃப்
ஹனீஃப்

கரூர் மாவட்டம், புகழூர் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் சையத் இப்ராகிம். இவரின் மனைவி ஷகிலா பானு (35). இவரின் தங்கை ரம்ஜான் கனி (32). ரம்ஜான் கனியின் கணவர் அலாவுதீன். அலாவுதீன், ஷகிலா பானுவிடம் அடிக்கடி செல்போனில் பேசி தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சையது இப்ராஹிம் தனது உடன் பிறந்த சகோதரரும், மாயனூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவரும் ஹனீஃப் (35) என்பவரிடம் கூறியிருக்கிறார்.

தனது அண்ணன் மனைவிக்கு போன் மூலம் பாலியல் தொந்தரவு தந்த அலாவுதீனை, ஹனீஃப் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனால், அலாவுதீன் தொடர்ந்து தொந்தரவு தந்துவந்தாராம். இதனால், இது சம்பந்தமாக கண்டிப்பதற்காக கரூர் வேலாயுதம்பாளையம், பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் கறிக் கடை நடத்திவரும் அலாவுதீனை, ஹனீஃப் சந்தித்திருக்கிறார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அலாவுதீனுக்கு ஆதரவாக அவரின் தந்தை அக்பர் (56), இம்ரான்கான் (30) இருவரும் காவலர் ஹனீஃபுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கத்திக் குத்து
கத்திக் குத்து

அதோடு, ஹனீஃபை அவர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. அவர்கள் இருவரும் தாக்கியதால், கோபமடைந்த காவலர் ஹனீஃப், பட்டன் கத்தியைக்கொண்டு, அவர்கள் இருவரையும் குத்தித் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. காயமுற்ற அக்பர், இம்ரான்கான் இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதோடு, வழக்கு பதிந்து காவலர் ஹனீஃபை வலைவீசித் தேடிவருகின்றனர். பாலியல் தொந்தரவு விவகாரத்தில் போலீஸ்காரர் கத்தியால் குத்திய விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு