Published:Updated:

சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த காவலர்! - வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட தீயணைப்புத்துறையினர்

போலீஸ்காரர்  மாஸ்கோ
News
போலீஸ்காரர் மாஸ்கோ

சினிமாவை மிஞ்சிய சம்பவம்... சாராய வியாபாரியைப் பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் உயிர் தப்பியது எப்படி?

நாகை மாவட்டம், கீழ்வேளூர், கோகூர் மாதா கோயில் அருகே சாராயம் விற்கப்படுவதாக ரகசியத் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மோகன்தாஸ், போலீஸ்காரர்கள் மாஸ்கோ, வினோத் ஆகியோர்  அங்கு விரைந்துள்ளனர்.

மாஸ்கோ
மாஸ்கோ

திருக்கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் தனபால் என்பவர் அந்த இடத்தில் சாராயம் விற்பனை செய்திருக்கிறார். போலீஸார் வருவதைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடிய தனபால், வெட்டாற்றில் திடீரென குதித்துவிட்டார். இதைக் கண்ட போலீஸ்காரர் மாஸ்கோவும் சற்றும் யோசிக்காமல் ஆற்றில் குதித்திருக்கிறார். அப்போது கனமழையால் ஆற்றில் அதிக அளவு தண்ணீர்  செல்ல போலீஸ்காரர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முட்புதருக்குள் சிக்கிக்கொண்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாராய வியாபாரி தனபாலோ, நீரில் நீந்தித் தப்பித்துச் சென்றுவிட்டார். இதைக் கண்ட மற்ற போலீஸார் உயரதிகாரிகளுக்கும், கீழ்வேளூர் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மாலை 6 மணி முதல் ஆற்றுக்குள் இறங்கித் தேடி இரவு 8 மணியளவில் கருவேல மரக்கிளையைப் பிடித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த போலீஸ்காரர் மாஸ்கோவை மீட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவலருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை நேரில்  சந்தித்து உடல்நலம் விசாரித்த எஸ்.பி ஜவகர், அவரை மீட்ட தீயணைப்புப் படை வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுப் பொருள்களும் வழங்கி கௌரவித்தார்.

நாகப்பட்டினம் எஸ்.பி அலுவலகம்
நாகப்பட்டினம் எஸ்.பி அலுவலகம்

`என்ன நடந்தது’ என்று போலீஸ்காரர் மாஸ்கோவிடம்  கேட்டோம்.

``கோகூர் மாதா கோயில் அருகே சாராயம் விற்பதாகத் தகவல் கிடைக்கவே அங்கு சென்றோம். எங்களைப் பார்த்தவுடனேயே சாராய வியாபாரி தனபால் ஓட ஆரம்பித்தார். நானும் வினோத்தும் அவனை விரட்டிச்  சென்றபோது, திடீரென ஆற்றில் குதித்துவிட்டார். கரையோரமாகத்தானே  குதித்திருப்பார், என்றெண்ணி நானும் அவரைப் பிடிக்கும் வேகத்தில் குதித்துவிட்டேன். அவரோ நீரில் மூழ்கி எங்கேயோ போய்விட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நானோ சுழலில் சிக்கி நடு ஆற்றுக்குத் தள்ளப்பட்டேன். அங்கு காட்டுக் கருவை ஒன்று இருக்க அதைப் பிடித்துக்கொண்டு `என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டேன். அதற்குள் ஆற்றுவெள்ளம்  வேகமாக இழுக்கவே, இடையூறாக இருந்த கைலி, ரெயின் கோட், செருப்பு ஆகியவற்றைக் கழற்றி ஆற்றில் விட்டுவிட்டுக் காத்திருந்தேன். அப்போதே இருட்டாகிவிட்டது.

தீயணைப்புப் படையினருக்கு எஸ்.பி ஜவகர் பாராட்டு
தீயணைப்புப் படையினருக்கு எஸ்.பி ஜவகர் பாராட்டு

ராஜராஜன் என்ற தீயணைப்பு வீரர் என் குரல் கேட்டு என்னைக் காப்பாற்ற வந்தார். லைஃப் ஜாக்கெட், ரோப் கயிறு மூலம் காப்பாற்றினார்கள். உடலெங்கும் முள் கிழித்து காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிவிட்டேன். நான் ஏற்கெனவே நாகூர் காவல் நிலையத்தில் வேலை பார்த்தபோது, இதே தனபாலை ஆற்றுக்குள் இறங்கித்தான் பிடித்து வந்தேன். அப்போது கோடைக் காலம். இப்போது மழை வெள்ளக் காலமென்பதால் சிக்கிவிட்டேன். இரண்டு நாளில் மறுபடியும் நான் பணிக்குத் திரும்புவேன். தனபால் எங்கிருந்தாலும் கைதுசெய்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பேன்" என்றார் உறுதியாக!