Published:Updated:

`ஆர்டர்லி' காவலர்கள் - நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு விடிவுகாலம் பிறக்குமா?

டி.ஜி.பி அலுவலகம்

காவல்துறையில் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் வீடுகளில் எடுபிடி வேலைகளை ஆர்டர்லி என்ற பெயரில் ஏராளமான காவலர்கள் வேலை செய்துவருகின்றனர். ஆர்டர்லி முறை ரத்துசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இன்னமும் அது தொடர்கதையாகிவருவது வேதனைக்குரியது.

`ஆர்டர்லி' காவலர்கள் - நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு விடிவுகாலம் பிறக்குமா?

காவல்துறையில் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் வீடுகளில் எடுபிடி வேலைகளை ஆர்டர்லி என்ற பெயரில் ஏராளமான காவலர்கள் வேலை செய்துவருகின்றனர். ஆர்டர்லி முறை ரத்துசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இன்னமும் அது தொடர்கதையாகிவருவது வேதனைக்குரியது.

Published:Updated:
டி.ஜி.பி அலுவலகம்

காவல்துறையில் `ஆர்டர்லி’ என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலத்தில், போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர். பிற்காலத்தில் ஆர்டர்லிகளாகப் பணியாற்றிய காவலர்கள், அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இது காலம் காலமாகக் காவல்துறையில் நடந்துவரும் செயல். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆர்டர்லி காவலர்கள், உயரதிகாரிகளால் பழிவாங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பயந்து, வேறு வழியின்றி ஆர்டர்லி பணிகளைக் காவலர்கள் செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

போலீஸ்
போலீஸ்

ஆர்டர்லி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. ஆர்டர்லி நடைமுறை ரத்துசெய்யப்பட வேண்டும் என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிய பிறகும் ஏனோ, காவல்துறையில் ஆர்டர்லி முறை தொடர்வது வேதனைக்குரியது. தமிழ்நாடு காவல்துறையில் முன்னாள், இந்நாள் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஆர்டர்லியாக இருக்கின்றனர். இவர்களில் சிலர் விருப்பப்பட்டு இந்தப் பணிகளைச் செய்துவருகின்றனர். ஆனால் பலர், நிர்பந்தத்தின் காரணமாக ஆர்டர்லிகளாக இருக்கின்றனர். காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளுக்கு அரசு சம்பளம். அதாவது, காவல்துறை அதிகாரிகளுக்கு, சம்பளம் கொடுக்காத வேலைக்காரர்களாக ஆர்டர்லி காவலர்கள் பணியாற்றிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில்தான் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவர், தன்னைக் காவலர் குடியிருப்பிலிருந்து வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸை எதிர்த்து கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்தபோது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்டர்லி காவலர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். காவலர் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு, கடந்த 14-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி, ''ஆர்டர்லி முறை தொடர்பாக, டி.ஜி.பி-க்கு, உள்துறைச் செயலர் கடிதம் அனுப்பியிருக்கிறார். உயரதிகாரிகளுடன், முதல்வரும் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று வாதிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ``போலீஸ் பணி என்ற கனவில் பயிற்சி முடித்து, மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுபவர்களை, அதிகாரிகளின் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக, ஆர்டர்லிகளாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். ஆர்டர்லி வைத்திருக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும், வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயரதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளிலுள்ள ஆர்டர்லிகளைத் திரும்பப் பெற வேண்டும்.
அரசியல்வாதிகளும் போலீஸாரும் கூட்டுச் சேர்ந்து இயங்கினால், அது அழிவுக்கு வழிவகுக்கும். போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் கறுப்பு ஸ்டிக்கரை அகற்றாமல் இருப்பதை என்னவென்று கூறுவது?’’ என்று கூறியதோடு, வழக்கு விசாரணையை ஜூலை 25-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

நீதிமன்றத்தின் இந்த அதிரடிக்குப் பிறகு தமிழ்நாடு காவல்துறையில் எந்தெந்த அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக, யார் யார் பணியாற்றுகிறார்கள் என்ற பட்டியல் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருசில ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் ஆர்டர்லிகளாகக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்பு, ஆர்டர்லிகளாகப் பணியாற்றும் காவலர்களைப் பணிக்கு திரும்பவும் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

போலீஸ்
போலீஸ்

இது குறித்து மனஉளைச்சலுக்குள்ளான ஆர்டர்லி காவலர்கள் சிலரிடம் பேசினோம். ``தமிழ்நாடு காவல்துறையில் ஆர்டர்லிகளின் எண்ணிக்கை முன்பைவிடக் குறைந்துவிட்டது. முதல்நிலைக் காவலர்கள் முதல் சப் இன்ஸ்பெக்டர்கள் வரை ஆர்டர்லி பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு வேலை நேரம் எனக் கிடையாது. யூனிஃபார்ம் அணியவேண்டியதில்லை. காவல் நிலையங்களிலிருந்து (உயரதிகாரிகளின் உத்தரவுப்படி) வரும் உத்தரவின்படி அதிகாரிகளின் வீடுகளில் சொல்லப்படும் வேலைகளைச் செய்து கொடுத்தால் போதும். அதிகாரிகளுக்கு விசுவாசமாக இருக்கும்போது சில காரியங்களையும் சில ஆர்டர்லி காவலர்கள் செய்துகொள்கின்றனர். அத்தகையவர்கள்தான் ஆர்டர்லி காவலர்களாகப் பணியாற்ற விரும்புவார்கள். அதேநேரத்தில் காவல்துறைக்குப் புதிதாக வேலைக்கு வருபவர்கள் (பட்டதாரிகள்) ஆர்டர்லியாகப் பணியாற்ற விரும்புவதில்லை. இன்னும் சில அதிகாரிகளின் வீடுகளில் மனித உரிமைமீறல் செயல்கள் நடக்கும்போதுதான் ஆர்டர்லி காவலர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். காவல்துறை பணி என்பதில் அதிகாரிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும். அதனால், அதிகாரிகள் என்ன வேலை செய்யச் சொல்கிறார்களோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் காவல் பணியில் கஷ்டங்களை சந்திக்க நேரிடும். தற்போது ஆர்டர்லி காவலர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையீட்டிருப்பதால் விடிவுகாலம் பிறக்கும் என நம்புகிறோம்" என்றார்.