Published:Updated:

கோவை: புகார் கொடுக்க வந்த திருநங்கை... காவலர்மீது பாலியல் வழக்கு பதிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

ஆனால், காவலர் என்பதால் மூவேந்தன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதையடுத்து, ராணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

கோவை அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (30). (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). திருநங்கையான ராணியின் செல்போன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமாகியிருக்கிறது. அது தொடர்பாக, ராணி ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.அப்போது, ராணி தன் வீட்டின் அருகேயுள்ள சிலரைச் சந்தேகப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோவை
கோவை
ஏலகிரியில் ரூம் போடலாமா? - வலைவீசிய மின்வாரிய அதிகாரி... வரிசைகட்டும் பாலியல் புகார்கள்...

அந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணைக்காக ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய காவலர் மூவேந்தன் வேல்பாரி (வயது 50), ராணியின் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது மூவேந்தன், ராணியைத் தரக்குறைவாகப் பேசி, குடிபோதையில் அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால், ராணி மீண்டும் அதே ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்துக்குச் சென்று காவலர் மூவேந்தன்மீது புகார் அளித்தார்.

காவலர் மூவேந்தன்
காவலர் மூவேந்தன்

ஆனால், காவலர் என்பதால் மூவேந்தன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதையடுத்து, ராணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், தற்போது காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் குடிபோதையில் திருநங்கைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து, தரக்குறைவாகப் பேசியதற்காக மூவேந்தன்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ராணியிடம் தவறாக நடந்துகொண்ட மூவேந்தன்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை திருநங்கைகள், காவல்துறை உயரதிகாரிகளை வலியுறுத்திவருகின்றனர்.

கோவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ்  மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்! - சிசிடிவியால் சிக்கினார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு