Published:Updated:

துணை நடிகை புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாய்மீது போலீஸார் வழக்கு பதிவு - பின்னணி என்ன?

துணை நடிகை சாந்தினி

துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தாய், அவரின் உறவினர்கள்மீது ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

துணை நடிகை புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாய்மீது போலீஸார் வழக்கு பதிவு - பின்னணி என்ன?

துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தாய், அவரின் உறவினர்கள்மீது ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
துணை நடிகை சாந்தினி

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இந்த நிலையில் மணிகண்டன் தன்னுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்துவந்ததாகவும், அதன் காரணமாக தான் மூன்று முறை கர்ப்பமடைந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதைத் தொடர்ந்து கர்ப்பத்தைக் கலைத்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் திரைப்படத் துணை நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

அதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமைச்சர் மணிகண்டன்மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் துணை நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து மணிகண்டன் விடுவிக்கப்பட்டார்.

மணிகண்டன்  | நடிகை சாந்தினி
மணிகண்டன் | நடிகை சாந்தினி

இந்த நிலையில் மணிகண்டன் தனக்குச் சில ஒப்பந்தங்கள் செய்து கொடுத்ததாகவும், ஆனால் அதைச் செய்து கொடுக்காமல் வழக்கை நான் வாபஸ் பெற்று, அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து தன்னைச் சந்திக்காமல் தலைமறைவாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார் சாந்தினி. மேலும் கடந்த மாதம் 14-ம் தேதி, மணிகண்டன் ராமநாதபுரத்திலுள்ள தனது வீட்டில் இருப்பதாகத் தகவல் அறிந்து, அவர் ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவிலுள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை வீட்டுக்கு அருகில் விடாமல் அவரின் தாய் மற்றும் உறவினர்கள் தடுத்து அடித்ததாகக் கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், ஆகியோருக்குக் கடிதம் வாயிலாகப் புகார் அனுப்பியுள்ளார். இது குறித்து விசாரித்து வழக்கு பதிவுசெய்ய ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தாய் அன்னக்கிளி, அவரின் உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் ஆறு பேர் மீது பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

அதேபோல் அமைச்சர் மணிகண்டன் வீட்டில் வேலை பார்த்துவரும் ஜெயவீரகுரு என்பவர் அளித்த புகாரில், `தான் பத்தாண்டுகளாக இங்கு வேலை செய்துவருவதாகவும், கடந்த மாதம் 14-ம் தேதி துணை நடிகை சாந்தினி காரில் அடியாட்களுடன் வந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டுக்குள் நுழைந்து அவரின் தாயாருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும்’ புகார் அளித்தார். இது தொடர்பாக துணை நடிகை சாந்தினி மீதும் பஜார் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்மீது துணை நடிகை மீண்டும் புகார் அளித்திருப்பது ராமநாதபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.