Published:Updated:

ரூ.85 ஆயிரத்துக்கு குழந்தையை விற்ற தாய்; ஆந்திராவில் மீட்ட போலீஸார் - நடந்தது என்ன?

குழந்தை விற்பனை
News
குழந்தை விற்பனை ( representational image )

சென்னையில் வறுமையின் காரணமாக 85 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குழந்தை விற்கப்பட்ட சம்பவத்தில் பெற்றோர், புரோக்கர், குழந்தையை வாங்கியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை வேளச்சேரி கண்ணகிநகரைச் சேர்ந்த தம்பதியினர், வறுமையின் காரணமாக தங்களின் 10 மாத ஆண் குழந்தையை விற்க முடிவு செய்தனர். அதன்படி குழந்தையின் அம்மா, தனக்குத் தெரிந்த இடைத்தரகர் ஒருவர் மூலம் குழந்தையை 85,000 ரூபாய்க்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை வாங்கிய இடைத்தரகர், 3 லட்சம் ரூபாய்க்கு செங்குன்றத்தில் உள்ள வயதான தம்பதியினரிடம் விற்றுள்ளார். அவர்கள் ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள ஒருவருக்கு குழந்தையை விற்றதாகக் கூறப்படுகிறது.

குழந்தை கடத்தல்
குழந்தை கடத்தல்
Representation Image

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னையில் விற்கப்பட்ட குழந்தை ஆந்திராவில் வளர்ந்துவந்தது. இந்தத் தகவல் ராயபுரம் குழந்தைகள் நலக் குழுமம் பாதுகாப்பின் அமைப்புக்கு தகவல் தெரிந்தது. உடனடியாக அந்த அமைப்பினர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் ஆந்திராவுக்குச் சென்று குழந்தையை மீட்டனர். தற்போது குழந்தை, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தை விற்பனை தொடர்பாக பெற்றோர், அதை வாங்கியவர்கள், புரோக்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.