Published:Updated:

திருச்சி: கைப்பற்றப்பட்ட 1,800 கிலோ குட்கா; போலீஸ் ரேடாரில் 'ராம்ஜிநகர்' - பகீர் தகவல்

குட்கா விற்பனை செய்யும் கும்பல்
குட்கா விற்பனை செய்யும் கும்பல்

சங்கிலியாண்டபுரம், பாலக்கரை, பாபு ரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட சிலர் மூலமாகப் பல பகுதிகளுக்குப் பிரித்து சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா போதைப்பொருள்கள் 1,800 கிலோ அளவில் திருச்சியில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தச் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் குட்கா சப்ளைக்கு முக்கியக் காரணம், குறிப்பிட்ட சிலர் என்கிற பகீர் தகவலைச் சொல்கிறார்கள் போலீஸார். எப்படி நடக்கிறது... என்ன செய்கிறார்கள் என்று விசாரித்தோம்.

குட்கா விற்பனை செய்த கும்பல்
குட்கா விற்பனை செய்த கும்பல்

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டு சென்று காண்பித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ``கமிஷன் வாங்கிக்கொண்டு, அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டியிருக்கலாம். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போகிறது” என்று அ.தி.மு.க அரசின் அவலத்தைச் சுட்டிக்காட்டி பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார். ஆனால் இன்று தி.மு.க ஆட்சியில் அமர்ந்தும், குட்கா விவகாரம் படுஜோராக நடந்துகொண்டிருப்பதாக ஜூனியர் விகடனில் அட்டைப்படக்கட்டுரையாகச் செய்தி வெளிவந்தது.

'குட்கா ஆதாரத்தைக் காட்டும் ஸ்டாலின்
'குட்கா ஆதாரத்தைக் காட்டும் ஸ்டாலின்
குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எந்தக் கடையில் குட்கா விற்கப்படுகிறதோ, அந்தக் கடையை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் குட்கா இல்லை என்கிற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே தீருவோம்" என உத்தரவாதம் அளித்தார். அதன் பிறகு, தமிழ்நாடு முழுவதும் போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு போதைப்பொருள்கள் பரவலைத் தடுத்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வகையில் திருச்சி பாலக்கரையிலுள்ள பென்சனர் காலனி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை மற்றும் பாலக்கரை போலீஸார் அடங்கிய குழுவினர் குடோன்களில் சோதனை செய்தனர்.

குட்கா மூட்டைகள்
குட்கா மூட்டைகள்

அதில் 55 மூட்டைகளிலிருந்த சுமார் 1,800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 20 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஐந்து பேரைக் கைதுசெய்திருப்பதோடு, வாகனங்கள் மற்றும் குடோன்களுக்கு சீல் வைத்திருக்கிறது திருச்சி போலீஸ்.

திருச்சியில் குட்கா பரவல் எப்படி நடக்கிறது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``திருச்சியைப் பொறுத்தவரையில் கஞ்சா மற்றும் குட்காவின் கூடாரமே 'ராம்ஜிநகர்'தான். இங்கிருந்துதான் திருச்சியில் பல பகுதிகளுக்குப் பிரித்து அனுப்புகிறார்கள்.

பறிமுதல் செய்த போலீஸார்
பறிமுதல் செய்த போலீஸார்

பெரிய கம்மாலத்தெரு, சங்கிலியாண்டபுரம், பாலக்கரை, பாபு ரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட சிலர் மூலமாகப் பல பகுதிகளுக்குப் பிரித்து சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதுவும் லோடு ஆட்டோவில் மெடிக்கல் எமர்ஜென்சி, காய்கறி வாகனம், மூலமாகக் கொண்டுவரப்பட்டு டூ வீலர் மூலமாக டோர் டெலிவிரி செய்யப்படுகிறது.

குட்கா
குட்கா

இப்படித்தான் இரண்டு வாரங்களுக்கு முன்புகூட காய்கறி ஏற்றிவந்த லோடு ஆட்டோவை மடக்கிப் பிடித்துப் பார்த்தபோது 2,000 கிலோ அளவுக்குப் பல போதை வஸ்துக்கள் பிடிபட்டன. அந்த டீம் கொடுத்த தகவலின்படி தொடர்ந்து கண்காணித்து தற்போது கைப்பற்றினோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு