Published:Updated:

வாகன சோதனையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த சகோதரர்கள்... சூட்கேஸில் கோடி ரூபாய் பணம்!

பணம்

சென்னை அண்ணாசாலையில் பைக்கில் சென்ற சகோதரர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வாகன சோதனையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த சகோதரர்கள்... சூட்கேஸில் கோடி ரூபாய் பணம்!

சென்னை அண்ணாசாலையில் பைக்கில் சென்ற சகோதரர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Published:Updated:
பணம்

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அண்ணாசாலை, பெரியார் சிலை அருகில் திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீஸார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பைக்கில் இரண்டு பேர் அவ்வழியாக சென்றனர். அவர்கள் சென்ற பைக்கில் சூட்கேஸ்கள் இருந்தன. வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார், அந்த பைக்கை நிறுத்தினர். வாகனம் தொடர்பான ஆவணங்களையும் பைக் ஓட்டியவரின் லைசென்ஸையும் போலீஸார் கேட்டனர்.

வாகனச் சோதனை
வாகனச் சோதனை

அப்போது பைக்கை ஓட்டிவந்தவரும், பின்னால் அமர்ந்திருந்தவரும் போலீஸாரைப் பார்த்ததும் பயத்தில் உளறத் தொடங்கினர். அதனால் சந்தேகமடைந்த போலீஸார் இருவரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என்று போலீஸார் கேட்டனர். சூட்கேஸை திறக்க இருவரும் யோசித்தனர். இதையடுத்து போலீஸார் சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது அதற்குள் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைப்பார்த்த போலீஸார், இவ்வளவு பணத்தை எங்கு கொண்டு செல்கிறீர்கள், நீங்கள் யார் என இருவரிடமும் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பணத்துடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு போக்குவரத்து போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வாகனச் சோதனையில் சிக்கியது ராயப்பேட்டையைச் சேர்ந்த முத்தையா. அவரின் தம்பி ராஜா. இவர்கள் இருவரும் சௌகார்பேட்டையில் பித்தளை பொருள்கள் கடை வைத்துள்ளனர். மேலும் வியாபாரம் தொடர்பாக ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பைக்கில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது. அந்தப் பணத்துக்கு எந்தவித ஆவணங்களும் இல்லை. அதனால் பணத்தையும் அவர்கள் இருவரையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம்" என்றனர்.

வருமானவரித்துறை விசாரணைக்குப்பிறகே பணம் தொடர்பான தகவல்கள் தெரியவரும்.