Published:Updated:

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: நள்ளிரவில் முடிவுக்கு வந்த `விக்கி’யின் கதை | மினி தொடர் - 4

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்

பஞ்சாப் சிறையிலிருந்து தப்பித்த விக்கியை போலீஸார் பஞ்சாப் - ராஜஸ்தான் எல்லையில் சுட்டுக்கொன்றனர்.

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: நள்ளிரவில் முடிவுக்கு வந்த `விக்கி’யின் கதை | மினி தொடர் - 4

பஞ்சாப் சிறையிலிருந்து தப்பித்த விக்கியை போலீஸார் பஞ்சாப் - ராஜஸ்தான் எல்லையில் சுட்டுக்கொன்றனர்.

Published:Updated:
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: சித்து மூஸ் வாலா கொலையும் வெளிவந்த கேங் வார்களும்... மினி தொடரின் முதல் பாகத்தைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்..!

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: கிரிமினல்களும், சில அரசியல் கனவுகளும் |மினி தொடரின் இரண்டாம் பாகத்தைப் படிக்க க்ளிக் செய்யவும்..!

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: சிறையிலிருந்து விக்கி தப்பியது எப்படி? | மினி தொடரின் மூன்றாம் பாகத்தைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்..!

சிறையிலிருந்து தப்பி சென்ற ஆறு பேரும் ஹரியானாவை நோக்கிச் செல்லும்போது ஓர் இடத்தில் போலீஸார் இவர்களின் காரைப் பார்த்தனர். ஆனால், அதை நிறுத்த முயன்றும் முடியாததால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அப்பாவிப் பெண் ஒருவர் உயிரிழந்தார். கிரிமினல்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பஞ்சாப், ஹரியானா இரு மாநிலங்களும் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டு அனைத்து இடங்களிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் ஹரியானாவின் கைதால் என்ற இடத்தை காலை 11 மணிக்குச் சென்றடைந்தனர். அங்கிருந்து இரண்டு தீவிரவாதிகள் தங்களது இடத்தை நோக்கிச் சென்றுவிட்டனர்.

விக்கி
விக்கி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மற்ற நான்கு பேரும் தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்குப் புறப்பட்டனர். தப்பிச் சென்றவர்களில் காலிஸ்தான் தீவிரவாதி ஹரிமிந்தர் நேராக டெல்லிக்குச் சென்றார். டெல்லியிலிருந்து தன் உறவினர் ஒருவருக்கு போன் செய்தார். இதை பஞ்சாப் போலீஸார் கண்காணித்துக்கொண்டிருந்தனர். போன் பேசிவிட்டு நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்குச் சென்றார். அங்கிருந்து மும்பை வழியாக கோவாவுக்குச் சென்று வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் நிஜாமுதின் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்தபோது போலீஸாரிடம் பிடிபட்டார்.

பஞ்சாப் போலீஸார் சிறையிலிருந்து தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க, தனிப்படை அமைத்து நாடு முழுவதும் சோதனை நடத்தினர். ஆனாலும் மற்ற யாரும் பிடிபடவில்லை. விக்கி சிறையிலிருந்து தப்பிச் சென்ற பிறகு பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் மிரட்டிப் பணம் பறித்தல், கடத்தல், கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டார். அவர்மீது 20-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்படடிருந்தன. விக்கியைப் பற்றித் தகவல் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று போலீஸார் அறிவித்திருந்தனர். 2017-ம் ஆண்டு விக்கி தன் எதிரிகள் மூன்று பேரை குருதாஸ்பூர் என்ற இடத்தில் சுட்டுக்கொலை செய்தார். விக்கி தன் எதிரிகளைக் கொலை செய்துவிட்டு அதைக் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சுக்கா என்ற தனது எதிரியை கொலை செய்த பிறகு அவரது உடல் முன்பு ஆடிப்பாடி தனது மகிழ்ச்சியைக் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விக்கி, தன் கூட்டாளி லஹோரியாவுடன் பஞ்சாப்-ராஜஸ்தான் எல்லையில் உள்ள பக்கி என்ற கிராமத்தில் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே விக்கியை போலீஸார் பல மாதங்களாகக் கண்காணிக்க ஆரம்பித்தனர். 2018-ம் ஆண்டு, ஜனவரி 26-ம் தேதி இரவு போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி விக்கியும் அவருடைய கூட்டாளியும் தங்கியிருந்த வீட்டில் தாக்குதல் நடத்தினர். உடனே விக்கியும் அரது கூட்டாளிகளும் எதிர்தாக்குதல் நடத்தினர். கடுமையாக நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் விக்கியும் லஹோரியாவும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மற்றொரு கிரிமினல் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வெகுவாகப் பாராட்டினார்.

விக்கியின் சரித்திரம் சரிந்தாலும், பஞ்சாப்பில் கேங்வார்களுக்கு மட்டும் குறைவில்லை. விக்கி ஆரம்பத்தில் ஜெய்ப்பால் சிங் என்பவரின் கூட்டத்திலும் இருந்தார். அதன் பிறகுதான் வெளியில் வந்து தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

கேங்ஸ்டர்ஸ்
கேங்ஸ்டர்ஸ்

ஜெய்ப்பால் சிங்கும் ஒரு விளையாட்டு வீரர்தான். அதுவும் அரசு சார்பில் பயிற்சி கொடுக்கும் விளையாட்டு அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டார். லூதியானாவில் விளையாட்டுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டே 2004-ம் ஆண்டு தனது முதல் குற்றத்தைச் செய்தார். சினிமா தியேட்டர் உரிமையாளர் மகனைக் கடத்தினார். ஜெய்ப்பால் அதிகமாக கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்திவந்தார். இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.1.33 கோடியை கொள்ளையடித்தார். அதோடு 2020-ம் ஆண்டு லூதியானாவில் 30 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்தார். அவர் மேற்கு வங்கத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடந்து 2021-ம் ஆண்டு பஞ்சாப் போலீஸாரும், மேற்கு வங்க போலீஸாரும் இணைந்து அவரைச் சுட்டுக்கொலை செய்தனர். இப்போது பஞ்சாப்பை பதறவைத்துக்கொண்டிருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்!