Published:Updated:

திருச்சி: `ஆடு திருடும் கும்பலைப் பிடிக்க முயன்ற எஸ்.ஐ; ஆத்திரத்தில் கொள்ளையர்கள் வெறிச்செயல்!'

பின்தொடர்ந்து வந்த ஆடு திருடர்கள், இருவரையும் விட்டு விடுமாறு எஸ்.ஐ பூமிநாதனை மிரட்டியிருக்கின்றனர். அதற்குப் பூமிநாதன் முடியாது என சொல்ல அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியிருக்கின்றனர்.

ஆடு திருடிய நபர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ் எஸ்.ஐ ஒருவர், கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனை

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலையத்தில் எஸ்.ஐ-யாக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்றிரவு வழக்கம் போல் நவல்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு டூவிலர்களில் ஆடுகளுடன் வந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்த எஸ்.ஐ பூமிநாதன் அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

அதிகாலையில் நடந்த கொலை
அதிகாலையில் நடந்த கொலை

ஆனால், அவர்கள் டூவீலர்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றிருக்கின்றனர். அதையடுத்து, எஸ்.ஐ பூமிநாதன், அவர்கள் ஆடுகளைத் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாக்கி டாக்கியில் சக போலீஸாருக்கு தகவலைச் சொல்லிவிட்டு அவர்களை டூவீலரில் விரட்டிச் சென்றிருக்கிறார்.

அந்த நபர்கள் திருச்சி - புதுக்கோட்டை, களமாவூர் ரயில்வே கேட் பகுதியிலிருக்கும் பள்ளப்பட்டி என்ற கிராமத்துக்குச் சென்ற போது, பூமிநாதன் ஒரு டூவிலரில் சென்ற இருவரைப் பிடித்திருக்கிறார். இந்த தகவலை உடனே நவல்பட்டு போலீஸாருக்கும் தெரிவித்திருக்கிறார்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

அப்போது பின்தொடர்ந்து வந்த ஆடு திருடர்கள், இருவரையும் விட்டு விடுமாறு எஸ்.ஐ பூமிநாதனை மிரட்டியிருக்கின்றனர். அதற்குப் பூமிநாதன் முடியாது என சொல்ல அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியிருக்கின்றனர். படுகாயமடைந்த எஸ்.ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி: `ஆடு திருடும் கும்பலைப் பிடிக்க முயன்ற எஸ்.ஐ; ஆத்திரத்தில் கொள்ளையர்கள் வெறிச்செயல்!'

அதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. இந்த படுகொலை சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நடந்ததால், சுமார் 4 மணியளவில் பள்ளப்பட்டி பகுதி பொதுமக்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது, போலீஸ்காரர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் , உடனடியாக கீரனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், எஸ்.ஐ பூமிநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை போலீஸாரும், திருச்சி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் பேசினோம். ``வழக்கம் போல் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, ஆடு திருடும் கும்பல் என்று தெரிந்ததும் அவர்களை விரட்டி பிடித்திருக்கிறார்.

எஸ்.ஐ பூமிநாதன்
எஸ்.ஐ பூமிநாதன்

அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் எஸ்.ஐ பூமிநாதனை வெட்டியிருக்கிறார்கள். இந்த தகவல் தான் எங்களுக்குக் கிடைத்தது. அவரை கொலை செய்தவர்கள் யார் என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தற்போதைக்கு, வேறு எதுவும் சொல்ல முடியாது” என்றனர்.

 திருச்சி: ஓடும் காரில் நகைக்கடை ஊழியர் கொலை! - உடலைக் காட்டில் புதைத்த கும்பல் சிக்கியது எப்படி?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு