Published:Updated:

சென்னை: போக்சோ வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ மகன் - 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

போக்சோ சட்டம்

சென்னையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் எஸ்.ஐ ஒருவரின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை: போக்சோ வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ மகன் - 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

சென்னையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் எஸ்.ஐ ஒருவரின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
போக்சோ சட்டம்

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `எனக்கு 13 வயதில் ஒரு மகளும் நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். என்னுடைய கணவர் குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் என்னுடைய மகளின் செயல்பாடுகளில் சந்தேகம் உள்ளது. அதனால் அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி கடந்த 19-ம் தேதி மாலை வீட்டைவிட்டுச் சென்று மறுநாள் 20-ம் தேதி காலை வீட்டுக்கு வந்தது தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இதையடுத்து சிறுமியிடம், `அன்றைய தினம் எங்கு சென்றாய்?’ என்று போலீஸார் விசாரித்தபோது அவர் கூறிய தகவல் அவரின் அம்மாவை அதிர்ச்சியடைய வைத்தது. சிறுமி அளித்த தகவலின்பேரில் திருவள்ளூர் மாவட்டம், காரனோடை ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜீவன் (20) என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``ஜீவனின் தந்தை சென்னையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார். மேலும் ஜீவனின் பாட்டி வீடு புளியந்தோப்பில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் அங்கு அடிக்கடி வந்தபோது 13 வயது சிறுமியுடன் ஜீவனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியை ஜீவன் காதலிப்பதாகக் கூறியுள்ளார். பின்னர் கடந்த 19-ம் தேதி இரவு சிறுமியை அழைத்துச் சென்ற ஜீவன், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மகளைக் காணாததால் அவரின் அம்மா அந்தப் பகுதியில் தேடியுள்ளார். இந்தச் சமயத்தில் மறுநாள் வீட்டுக்கு வந்த மகளிடம் எங்கு சென்றாய் என்று அவளின் அம்மா கேட்டுள்ளார். அதற்கு சிறுமி மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.

கைது
கைது

அதனால் சந்தேகமடைந்த சிறுமியின் அம்மா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். சிறுமியிடம் விசாரித்தபோதுதான் ஜீவனுடன் அவள் சென்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து ஜீவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை, கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு ஜீவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism