Published:Updated:

`லாரிக்கு வழிவிடாத ரவுடிகள்' - டிரைவருக்காகக் கொலை செய்த `காக்கா முட்டை'

எஸ்.மகேஷ்

தாம்பரத்தில் லாரிக்கு வழிவிடாத தகராறில் இரண்டு ரவடிகள் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ரவுடிகள்
கொலை செய்யப்பட்ட ரவுடிகள்

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், அற்புதம் நகரைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (30), கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் புட்டி சுரேஷ் (29). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவர் மீதும் அடிதடி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், புட்டி சுரேஷ் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

Representational image
Representational image

இந்த நிலையில் பிரதீப்பும், சுரேஷும் அற்புதம் நகர் கலங்கல் தெருவில் வந்துகொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த கும்பல், இருவரையும் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பட்டப்பகலில் இந்தச் சம்பவம் நடந்ததால் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் பிரபாகர், உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீஸார் வந்தனர். சடலமாகக் கிடந்த பிரதீப், சுரேஷை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போலீஸார் கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரவுடி
கொலை செய்யப்பட்ட ரவுடி

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பிரதீப்புக்கும் சுரேஷுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இதனால் இருவரும் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். இந்தச் சமயத்தில்தான் கடப்பேரி அருகே உள்ள பர்மா காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரதீப் மற்றும் அவரின் நண்பர்கள் வந்தனர். அப்போது இந்தக் கும்பலுக்குப் பின்னால் லாரி வந்துள்ளது. அந்த லாரிக்கு பிரதீப் டீம் வழிவிடவில்லை. இதனால் லாரி டிரைவர் ரங்கநாதன் வழிவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து, ரங்கநாதனுக்கும் பிரதீப் டீமுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகவல் ரங்கநாதனின் உறவினரான காக்கா முட்டை (எ) பாபுவுக்கு தெரியவந்தது. உடனே பிரதீப்பின் தந்தை சுகுமாரை காக்கா முட்டை டீம் தாக்கியது. இதனால் காக்கா முட்டை டீமை பழிவாங்க பிரதீப் கத்தியோடு அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்தார். இதனால் அவரைப்பிடிக்க போலீஸார் தேடிவந்தனர். அவர் தலைமறைவாக இருந்ததால் பிரதீப்பின் மனைவி நதியாவை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இருவர் மீதும் அடிதடி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், புட்டி சுரேஷ் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
போலீஸ் உயரதிகாரி

இதனால்தான் பிரதீப், அவரின் நண்பர் சுரேஷை சந்திக்க வந்தார். அப்போதுதான் அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவரையும் கொலை செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.