Published:Updated:

டி.எஸ்.பி டார்ச்சர்?; விஷம் குடித்த பெண் எஸ்.ஐ! - `விசாரணை மூலம் நடவடிக்கை’ என அரியலூர் எஸ்.பி உறுதி

விஷம் குடித்து தற்கொலை முயற்சி

``காவல்துறை என்பது பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய துறை. இதற்கு ஒரு களங்கம் ஏற்படும் பட்சத்தில் அது யாராக இருந்தாலும் விசாரணையும் நடவடிக்கையும் கடுமையாக இருக்கும்"

டி.எஸ்.பி டார்ச்சர்?; விஷம் குடித்த பெண் எஸ்.ஐ! - `விசாரணை மூலம் நடவடிக்கை’ என அரியலூர் எஸ்.பி உறுதி

``காவல்துறை என்பது பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய துறை. இதற்கு ஒரு களங்கம் ஏற்படும் பட்சத்தில் அது யாராக இருந்தாலும் விசாரணையும் நடவடிக்கையும் கடுமையாக இருக்கும்"

Published:Updated:
விஷம் குடித்து தற்கொலை முயற்சி

அரியலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், நேற்று மாலை செந்துறை பிரிவு சாலையில் பணியில் இருந்த போது மயங்கி கீழே விழுந்திருக்கிறார். அதைக் கண்டு பதறிய சக போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், `விஷம் குடித்திருக்கிறார்’ என்கிற தகவலைச் சொல்லவே, அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்தத் தகவலை உயரதிகாரிகளுக்கு பாஸ் செய்திருக்கின்றனர்.

அரியலூர்
அரியலூர்

இந்த நிலையில் அந்தப் பெண் எஸ்.ஐ-க்கு, டி.எஸ்.பி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால்தான் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக குற்றசாட்டு எழுந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்ன நடந்தது என்று அந்த பெண் எஸ்.ஐ உடன் பணிபுரியும் போலீஸார் சிலரிடம் பேசினோம். ``அரியலூர் மாவட்டத்திற்குப் பொறுப்பு டி.எஸ்.பி-யாக இருந்து வரும் அவர் அரியலூரில் எஸ்.ஐ-யாக இருந்துவரும் அந்தப் பெண்ணுக்கு கடந்த சில தினங்ளுக்கு முன்பு இரவு நேரத்தில் போன் செய்து, `உங்க ஏரியாவில் ஏதோ பிரச்னை நடக்கிறது.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

போய் பார்த்துவிட்டு எனக்கு என்ன ஸ்டேட்டஸ் என்று உடனே சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த எஸ்.ஐ , `சார், அன் டைம் ஆயிருச்சு. பிள்ளைங்களோட வீட்டுல இருக்கேன். கண்டிப்பா போகணுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், `உயர் அதிகாரி சொன்னா கேட்க மாட்டீங்களா, போய் பார்த்துட்டு சொல்லுங்கம்மா?’ என்று கடுமையாகப் பேசியிருக்கிறார். அதற்கு அவரும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது எந்த பிரச்னையும் நடக்கவில்லையாம். அதை அப்படியே சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் இரண்டு நாள்களில், தான் பணிபுரியும் ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ வந்தபோது, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர், `உன்னை டி.எஸ்.பி வர சொல்கிறார். உடனே பார்த்துட்டு வா’ என்று சொல்லியிருக்கிறார். டி.எஸ்.பி-யைச் சந்தித்தபோது அவர் அந்தப் பெண்ணிடம் தவறாகப் பேசியிருக்கிறார்.

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி

அவர் நடந்துக்கொண்ட விதம் பிடிக்காமல் எஸ்.ஐ அழுது கொண்டே வெளியில் வந்ததோடு, சக போலீஸாரிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார். இந்த நிலையில், அடுத்த நாள் அந்த எஸ்.ஐ திருச்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அவர், மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனுக்கும், பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கும், அந்த டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அரியலூர் நீதிபதியைச் சந்தித்தும் நடந்ததைச் சொல்லியிருக்கிறார். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. அதனால், மனஉளைச்சலில் மருந்தைக் குடித்துவிட்டார்" என்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி-யிடம். ``நான் அரியலூர் பொறுப்பு டி.எஸ்.பி.யாக பதவியேற்று இன்றோடு ஒன்பது நாள்கள்தான் ஆகின்றன. அந்த எஸ்.ஐ இரண்டு முறைதான் நேரில் பார்த்துப் பேசியிருக்கிறேன். இப்படி இருக்கும் பட்சத்தில் நான் எப்படி அவரிடம் தவறாகப் பேசியிருக்க முடியும்? அப்படிப் பேசியிருந்தால் ஆதாரத்தைக் காட்டச்சொல்லுங்கள் பார்ப்போம்.

போலீஸ்
போலீஸ்

எஸ்.ஐ சரியாக வேலை பார்க்கமாட்டார், உயர் அதிகாரிகள் வேலை கொடுத்தால், `மருந்து குடிச்சிட்டு செத்துப்போய்டுவேன். அதுக்கு காரணம் நீங்க தான்'னு எழுதி வச்சிருவேன்’ என்று அடிக்கடி உயர் அதிகாரிகளை மிரட்டுவார். அரியலூர் எஸ்.பி ஜெயங்கொண்டத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக அனுப்பியிருந்தார். அவர் கடைசி வரையிலும் அங்குச் செல்லவே இல்லை. இப்படி இருந்தால் எப்படி வேலை வாங்குவது. விசாகா கமிட்டி விசாரிக்கட்டும், தவறு யார் மீது இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும்” என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லாவிடம் பேசினோம். ``அந்த பெண் எஸ்.ஐ பிரச்னையை என்னிடம் முன்னமே கூறியிருந்தால் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பேன். காவல்துறை என்பது பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய துறை. இதற்கு ஒரு களங்கம் ஏற்படும் பட்சத்தில் அது யாராக இருந்தாலும் விசாரணையும் நடவடிக்கையும் கடுமையாக இருக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism