Published:Updated:

தேனி: கஞ்சா விற்றவர்களைப் பிடித்தும் கைதுசெய்ய முடியாமல் தவிக்கும் போலீஸார்... நடந்தது என்ன?

கஞ்சா விற்பனை

``புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆட்டோ, லாரிகளில் செல்வோரை மறித்து கஞ்சா விற்பனை நடந்தது. அப்போது கையும் களவுமாக அவர்களைப் பிடித்தோம். சுதாரித்துக்கொண்ட அவர்கள், அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டனர்.”

தேனி: கஞ்சா விற்றவர்களைப் பிடித்தும் கைதுசெய்ய முடியாமல் தவிக்கும் போலீஸார்... நடந்தது என்ன?

``புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆட்டோ, லாரிகளில் செல்வோரை மறித்து கஞ்சா விற்பனை நடந்தது. அப்போது கையும் களவுமாக அவர்களைப் பிடித்தோம். சுதாரித்துக்கொண்ட அவர்கள், அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டனர்.”

Published:Updated:
கஞ்சா விற்பனை

தேனியில் அதிகமாக கஞ்சா வியாபாரம் நடப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் காவல் ஆய்வாளர் சத்யா தலைமையில் தலைமைக் காவலர்கள் ஸ்டாலின், ராஜா, ராஜேந்திரன் ஆகியோர் புதூர் கிழக்கு தெருப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதை அறிந்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்தினர். 

கைது
கைது

கடந்த அக்டோபர் 20-ம் தேதி  ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்க அனுப்பியுள்ளனர். அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த யோவான், வீரமுத்துக்குமார் ஆகியோரிடம் பணம் கொடுத்து மூன்று பாக்கெட் கஞ்சா வாங்கியபோது விற்பனை செய்த இருவரையும் கைதுசெய்ய முயன்றனர். இதையறிந்த அவர்களுடைய உறவினர்கள் சேர்ந்துகொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்யவிடாமல் பிரச்னை செய்துள்ளனர். இதனால் போலீஸார் அங்கிருந்து வந்துவிட்டனர். 

இதையடுத்து தொடர்ந்து யோவான், வீரமுத்துக்குமார் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களை போலீஸார் கண்காணித்துவந்தனர். இந்த நிலையில் தேனி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதி அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த யோவான், வீரமுத்துக்குமார் ஆகியோரைப் பிடித்து ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆட்டோ அன்னஞ்சி விலக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அழகுராணி, பாண்டி உட்பட 15 பேர் ஆட்டோவை மறித்து, கைதான இருவரையும் விடுவிக்குமாறு பிரச்னை செய்துள்ளனர். 

குற்றம்
குற்றம்

அவர்களை விடுவிக்க மறுத்த போலீஸாரிடம் கும்பலாக வந்தவர்கள் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் தேனி டவுன் போலீஸார், யோவான், வீரமுத்துக்குமார், அழகுராணி, பாண்டி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அழகுராணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தேனி மாவட்டத் தலைவராக இருக்கிறார். அவர் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் கஞ்சா வியாபாரம் செய்தது, அவர்களைக் கைதுசெய்ய முயன்றபோது எங்களைத் தாக்க முயன்றது என அனைத்துக்கும் வீடியோ ஆதாரங்கள் வைத்திருக்கிறோம். புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆட்டோ, லாரிகளில் செல்வோரை மறித்து கஞ்சா விற்பனை நடந்தது. அப்போது கையும் களவுமாக அவர்களைப் பிடித்தோம். சுதாரித்துக்கொண்ட அவர்கள் அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டனர்.

தகைது
தகைது

அங்கு வந்த கும்பல் எங்களிடம் தகராறு செய்தனர். அந்த வேளையில், அந்த வழியாக தேனி எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே வந்தார். அவரும் காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். நிலைமை சரியில்லாத காரணத்தால் தேனி டவுன் போலீஸாரிடம் புகார் அளிக்கக் கோரினார். அதன்படி புகார் அளித்திருக்கிறோம். இந்த நிலையில் அழகுராணி, தன்னிடம் போலீஸார் தவறாக நடந்துகொண்டதாகப் பொய்ப் புகார் ஒன்றை அளித்துவிட்டு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்” என்றனர்.