Published:Updated:

விருந்துக்குச் சென்ற இடத்தில் திருட்டு... பிரியாணியோடு செயின்களை விழுங்கிய இளைஞர்!

பிரியாணி ( சித்திரிப்புப் படம் )

ரம்ஜான் விருந்துக்கு தோழியின் வீட்டுக்குச் சென்ற இளைஞர், அங்கு தங்கச் செயின்களைத் திருடி அதை பிரியாணியோடு சேர்த்து விழுங்கியுள்ளார்.

விருந்துக்குச் சென்ற இடத்தில் திருட்டு... பிரியாணியோடு செயின்களை விழுங்கிய இளைஞர்!

ரம்ஜான் விருந்துக்கு தோழியின் வீட்டுக்குச் சென்ற இளைஞர், அங்கு தங்கச் செயின்களைத் திருடி அதை பிரியாணியோடு சேர்த்து விழுங்கியுள்ளார்.

Published:Updated:
பிரியாணி ( சித்திரிப்புப் படம் )

சென்னை சாலிகிராமம், அருணாசலம் சாலையில் குடியிருப்பவர் தாட்சாயணி (34). இவர் அந்தப் பகுதியிலுள்ள நகைக்கடை ஒன்றில் வேலை செய்துவருகிறார். இந்தக் கடையில் மேலாளராக இருப்பவர் சாரா. ரம்ஜான் பண்டிகையையொட்டி சாராவை பிரியாணி விருந்துக்கு வீட்டுக்கு அழைத்துள்ளார் தாட்சாயிணி. இதையடுத்து சாராவும், தன்னுடைய நண்பர் சையத் முகமது அபுபக்கர் என்பவரை அழைத்துகொண்டு தாட்சாயிணி வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பிரியாணி
பிரியாணி
சித்தரிப்புப் படம்

அவர்கள் சென்ற பிறகு வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறார் தாட்சாயிணி. அப்போது பீரோ திறந்து கிடந்திருப்பதைப் பார்த்த அவர், சந்தேகத்தின்பேரில் நகைகளை சோதனை செய்திருக்கிறார். ஆனால், பீரோவிலிருந்த ஒரு சவரன் எடையுள்ள மூன்று தங்க செயின்கள் மாயமாகியிருந்தன. அதில் ஒரு தங்க செயினில் வைரம் பதிக்கப்பட்டிருந்தது. நகைகள் மாயமாகியிருந்ததால், அதிர்ச்சியடைந்த தாட்சாயிணி வீடு முழுவதும் தேடிப் பார்த்தார். ஆனால் நகைகள் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து சாராவிடம் விவரத்தைத் தெரிவித்தார். பின்னர் தாட்சாயிணி நகைகள் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்பேரில் போலீஸார் தாட்சாயிணியிடம் நகைகள் குறித்து விசாரித்தனர். மேலும், வீட்டுக்கு யாரெல்லாம் வந்து சென்றார்கள் என்ற தகவலையும் கேட்டனர். அப்போது ரம்ஜான் விருந்துக்கு சாராவும், அவரின் நண்பர் சையத் முகமது அபுபக்கரும் வந்த விவரத்தை போலீஸாரிடம் தாட்சாயிணி தெரிவித்தார். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது சையத் முகமது அபுபக்கர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். போலீஸாரின் தீவிர விசாரணையில் சையத் முகமது அபுபக்கர், பீரோவிலிருந்த மூன்று செயின்களைத் திருடியதாகவும் அதை பிரியாணியோடு சேர்த்து விழுங்கிவிட்டதாகவும் கூறினார்.

செயின்
செயின்

இதையடுத்து போலீஸார், சையத் முகமது அபுபக்கரை ஸ்கேன் சென்டருக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது அவரின் வயிற்றில் தங்கச் செயின் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சையத் முகமது அபுபக்கரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இனிமா கொடுத்து தங்கச் செயின்களை வெளியில் எடுக்க முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததது. இதையடுத்து வாழைப்பழங்களை வாங்கிக் கொடுத்து சையத் முகமது அபுபக்கரின் வயிற்றிலிருந்த தங்க செயின்கள் வெளியில் எடுத்தனர். தங்க செயின்களை திருடிய சையத் முகமது அபுபக்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தாட்சாயிணி போலீஸாரிடம் கேட்டுக்கொண்டதையடுத்து சையத்தை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism