Published:Updated:

இதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நீதியா?

சபரிராஜன், திருநாவுக்கரசு
பிரீமியம் ஸ்டோரி
சபரிராஜன், திருநாவுக்கரசு

குண்டாஸ் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள்

இதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நீதியா?

குண்டாஸ் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள்

Published:Updated:
சபரிராஜன், திருநாவுக்கரசு
பிரீமியம் ஸ்டோரி
சபரிராஜன், திருநாவுக்கரசு

ட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை, தற்போது சி.பி.ஐ விசாரித்துக்கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் கும்பலில் உண்மையில் எத்தனை பேர் உள்ளனர், அவர்களுக்கு அரசியல் பின்னணி இருக்கிறதா... போன்ற கேள்விகளுக்கெல்லாம் சி.பி.ஐ விசாரணையில் பதில் கிடைக்கும் எனவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் எனவும் எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இந்தச் சூழலில், முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர்மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்துசெய்யப்பட்டிருப்பது, பொள்ளாச்சி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி-யிடம் இருந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், குண்டர் சட்டத்தை எதிர்த்து திருநாவுக்கரசின் அம்மா லதா மற்றும் சபரிராஜனின் அம்மா பரிமளா ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘குண்டாஸ் தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவு ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை’ எனவும், `குண்டர் சட்டத்தில் அடைத்துப் பிறப்பித்த ஆவணங்களில் தெளிவில்லை’ எனவும் குறிப்பிட்டு, இருவர் மீதான குண்டாஸை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சௌந்தர்யா, கலையரசு, ராதிகா, சுஜித்குமார்
சௌந்தர்யா, கலையரசு, ராதிகா, சுஜித்குமார்

பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யா, “இந்தச் சம்பவத்துக்கு அப்புறம் எங்க ஊர் பெயரை வெளியில சொல்லவே முடியலை. பொள்ளாச்சினு சொன்னாலே இந்த வழக்கைப் பத்தித்தான் பேசுறாங்க. பொள்ளாச்சிப் பெண்கள்னாலே மோசமானவங்கங்கிற முட்டாள்தனமான எண்ணம்தான் வெளியூர் மக்கள் மனசுல உருவாகியிருக்கு. `நிச்சயதார்த்தம் நின்னுபோச்சு... கல்யாணம் நின்னுபோச்சு’னு சம்பந்தமே இல்லாத அப்பாவிப் பொண்ணுங்க புலம்புவதைக் கேட்கிறப்போ மனசு பொறுக்கல. குற்றவாளிகளைக் காப்பாத்தத்தான் இத்தனை நாள் சிறையில் வெச்சிருந்தாங்களோன்னு தோணுது. துணிந்து புகார் கொடுத்த பொண்ணுக்கு சட்டம் இப்படியான பதிலைத் தருங்கிறதை நினைச்சுகூடப் பார்க்க முடியலை” என்றார் ஆதங்கத்துடன்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா, “ தமிழக அரசு போதிய சான்றுகளைச் சமர்ப்பிக்கத் தவறியதுதான் குண்டாஸ் ரத்துசெய்யப்பட காரணம். பெண்களின் நலன்குறித்த விஷயத்தில் பிற்போக்குத்தனமாகவும் மெத்தனமாகவும் அரசின் நடவடிக்கைகள் இருப்பதையே இது காட்டுகிறது. ‘தங்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது’ என நினைக்கும் பெண்கள்மீது, இது பேரிடியாக இறங்கியிருக்கிறது” என்றார்.

சபரிராஜன், திருநாவுக்கரசு
சபரிராஜன், திருநாவுக்கரசு

கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசு, “குண்டாஸ் என்பது, தண்டனை கொடுக்கும் சட்டமல்ல; தடுப்புக் காவல் சட்டம். சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியின் பரிந்துரையின்பேரிலேயே குண்டாஸ் சட்டம் பதியப்படும். எந்தெந்த ஆவணங்களின் அடிப்படையில் குண்டாஸ் பதியப்பட்டுள்ளது என்ற விவரங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உறவினர்களிடம் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். இந்த வழக்கில் அது நடக்கவில்லை. பொதுவாக, ஜாமீனில் வெளிவரும் நிலையில் குற்றவாளி இருந்தால் மட்டுமே குண்டாஸ் போட முடியும். ஆனால், பொள்ளாச்சி குற்றவாளிகள்மீது குண்டாஸ் பாய்ந்தபோது, ஜாமீன் மனுவே தாக்கல் செய்யப்படவில்லை. மக்களை அமைதிப்படுத்த வேண்டும் என்பதற்காக, அவசரகதியில்தான் இந்த வழக்கில் குண்டாஸ் போடப்பட்டது. நீதிமன்றம் சட்டப்படிதான் செயல்படுமே தவிர, உணர்வுரீதியாகச் செயல்படாது” என்றார்.

“இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில்... அதில் பல அதிர்ச்சித் தகவல்கள் இருக்கின்றன. குறிப்பாக, அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகளைக் குற்றவாளி களாக இணைத்திருந்தனர். மேலும் நான்கு பெண்கள் இந்தக் கும்பல்மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அரசியல் வாரிசு களைக் காப்பாற்றவே குண்டாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என்ற விவரமெ ல்லாம் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பில்லை. போலீஸ் மற்றும் வழக்கறிஞர் களின் ஆலோசனையின் பேரிலேயே இது நடந்துள்ளது. குண்டாஸ் ரத்துசெய்யப்பட்டதன் மூலம், அவர்களுக்கு எளிதில் ஜாமீனும் கிடைத்துவிடும்” என்கிறார்கள், இந்த வழக்கைத் தொடர்ந்து கவனித்துவருபவர்கள்.

கோயம்புத்தூர் மாவட்ட எஸ்.பி சுஜித்குமாரிடம் பேசியபோது, “இந்த வழக்கு சரியாகத்தான் நடைபெறுகிறது. குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் குண்டாஸுக்குப் பரிந்துரைத்தோம். நீதிமன்றம் அதை ரத்துசெய்தால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்றார்.

புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக இடமாற்றம் செய்யப் பட்டு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருந்த எஸ்.பி பாண்டியராஜனுக்கு, தற்போது பணியிடம் வழங்கப்பட்டுவிட்டது. ‘பொறுப்பற்ற அதிகாரிகள்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை, குற்றவாளிகள்மீதும் நடவடிக்கை இல்லையென்றால்... எதற்காக இத்தனை சட்டங்கள்?