Published:Updated:

பொள்ளாச்சி: பட்டியல் இன இளைஞர் மீது தாக்குதல்... வலுக்கும் போராட்டம்! - நடந்தது என்ன?

பட்டியல் இன இளைஞர்மீது தாக்குதல்
News
பட்டியல் இன இளைஞர்மீது தாக்குதல்

கோவை பொள்ளாச்சி அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹர சுதாகர். லோடிங் வேலை செய்துவரும் இவர், முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மேஜர் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் வேலை செய்துவந்தார்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது சுதாகருக்கும், அங்கு பணியாற்றி வந்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சுதாகர் அந்தப் பணியில் இருந்து விலகிவிட்டார்.

ஆனாலும், அவர்களின் காதல் விவகாரம் ராமசாமி குடும்பத்துக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ராமசாமியின் மனைவி தன் குடும்பத்தாரிடம் எச்சரித்ததாகவும் சுதாகர் கூறியுள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சுதாகர் மதுபோதையில் ராமசாமி வீட்டுக்குச் சென்று தான் காதலிக்கும் பெண்ணிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஹரிஹர சுதாகர்
ஹரிஹர சுதாகர்

சுதாகர் வாக்குவாதம் செய்தும் ராமசாமி தரப்பு அவரை அனுமதிக்கவில்லை. இதனால், சுதாகர் சிறிது நேரத்துக்குப் பிறகு ராமசாமி வீட்டின் கேட்டை ஏறி குதித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆத்திரமடைந்த ராமசாமி தனது பணியாள்கள் மூலம் தன்னைக் கட்டிவைத்து, கடுமையாக தாக்கியதாக சுதாகர் புகார் அளித்துள்ளார். இதையெல்லாம் ராமசாமி வேடிக்கை பார்த்ததாகவும், அவரின் தூண்டுதலால்தான் தாக்குதல் நடைபெற்றதாகவும் சுதாகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இளைஞர் காயம்
இளைஞர் காயம்

அவரின் புகாரின் பெயரில் ராமசாமி உட்பட ஆறு பேர்மீது ஆனைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்நிலையில், சாதிய ஆதிக்கம் காரணமாக ராமசாமி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுதாகரைத் தாக்கியதாக இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு எழுந்தது.

ராமசாமி உள்ளிட்டோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே, கொரோனோ விதிகளை மீறி, கூட்டம் கூடி போராட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி முற்போக்குக் கூட்டணி கட்சியினர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

போராட்டம்
போராட்டம்

மேலும், சுதாகரின் புகாரின் அடிப்படையில் ராமசாமி உள்ளிட்டோரை கைதுசெய்யவும் நடவடிக்கை எடுத்துவருவதாக போலீஸ் கூறியுள்ளது.