Published:Updated:

நீலகிரி: நூலகக் கழிப்பறையில் கர்ப்பிணியின் சடலம் - கூடலூர் தனியார் பள்ளி ஆசிரியை இறந்த மர்மம்!

தற்கொலை
News
தற்கொலை

5 மாத கர்ப்பிணியான தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் நூலக கழிப்பறையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் செவிடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜன். இவரது மனைவி பவானி(28). 5 மாத கர்ப்பிணியான இவர் கூடலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்று வருவதாகச் சொல்லி வீட்டைவிட்டு கிளம்பியுள்ளார் பவானி. ஆனால் சென்றவர் வீடு திரும்பவேயில்லை.

மாயமான ஆசிரியை பவானி குறித்து கூடலூர் காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில்,கூடலூர் கிளை நூலகத்தின் கழிப்பறைக்குள் தூக்கிட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று இருப்பதாகக் கூடலூர் காவலர்களுக்கு தகவல் வந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நூலகத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட காவலர்கள்,பெண் சடலம் இருப்பதை உறுதி செய்தனர். மாயமான ஆசிரியை பவானியின் சடலமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஆசிரியை பவானியின் உறவினர்களைகளை அழைத்து அடையாளம் காணச் செய்ததில், இறந்தது பவானிதான் என உறுதி செய்தனர். உடலைமீட்டு கூராய்வுக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பவானி
பவானி

கர்ப்பிணியின் இறப்பு குறித்து பேசிய கூடலூர் காவல்துறையைச் சேர்ந்த அத்காரி ஒருவர்,``பவானி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அவருக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகியிருக்கிறாது. ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறோம்" என்றார்.