Published:Updated:

கணவன் குடும்பத்தார் துன்புறுத்தல்; தூக்கில் தொங்கிய கர்ப்பிணி! - வேலூரில் சோகம்

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

கணவன் குடும்பத்தாரின் துன்புறுத்தலால், ஐந்து மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கணவன் குடும்பத்தார் துன்புறுத்தல்; தூக்கில் தொங்கிய கர்ப்பிணி! - வேலூரில் சோகம்

கணவன் குடும்பத்தாரின் துன்புறுத்தலால், ஐந்து மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள பெரிய ஏரியூர் தாமரைக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரின் 25 வயது மகன் திலீப்குமார், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் 21 வயது மகள் காயத்ரிக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்க்கையில் இணைந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே, கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ‘‘அக்கம் பக்கத்தில் யாரிடமும் பேசக் கூடாது; யார் வீட்டுக்கும் போகக் கூடாது; தந்தை வீட்டுக்கும் செல்லக் கூடாது’’ என மாமியாரும், கணவரும் கட்டளையிட்டு, காயத்ரியை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

இந்த நிலையில், காயத்ரி கருவுற்றார். ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், அவரைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள் காயத்ரியின் உறவினர்கள். மன உளைச்சலில் இருந்த காயத்ரி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்கிறார்கள். தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து கணவர் திலீப்குமார், அவரின் சகோதரிகள் செல்வி, திவ்யா ஆகிய மூவரிடமும் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism