Published:Updated:

சென்னை: பெண்கள் சிறையில் கைதிகளுக்குள் மோதல் - தடுக்கச் சென்ற காவலருக்கு அடி உதை

புழல் சிறை

சென்னை புழல் பெண்கள் சிறையில் இரண்டு வெளிநாட்டுக் கைதிகளுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அதைத் தடுக்கச் சென்ற பெண் காவலருக்கு அடி உதை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புழலில் ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியாக சிறைகள் இருக்கின்றன. பெண்கள் சிறையில் வெளிநாட்டைச் சேர்ந்த மோனிகா, சீனோ என இரண்டு கைதிகள் போதைப்பொருள் விற்றது தொடர்பாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகள் உணவு பெற வரிசையில் காத்திருந்தனர். அப்போது மோனிகா, சீனோ ஆகியோருக்கு இடையே திடீரெனத் தகராறு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது.

 புழல் சிறை
புழல் சிறை

இதையடுத்து சிறைக் காவலர் கோமளா, வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு கைதிகளையும் சமதானப்படுத்தினார். அப்போது திடீரென இரண்டு கைதிகளும் காவலர் கோமளாவைத் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து சக கைதிகள் சண்டையை விலக்கிவிட்டனர். இந்தத் தாக்குதலில் கோமளா காயமடைந்தார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற காவலர் கோமளா, கைதிகள் மோதல் குறித்தும், தான் தாக்கப்பட்டது குறித்தும் புழல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். பெண்கள் சிறையில் கைதிகளுக்கிடையே நடந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து பெண்கள் சிறையில் கைதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள்.