Published:Updated:

கைதுக்குக் காத்திருந்த போலீஸார்; ரெளடியைத் தப்பிக்கவிட்ட வார்டன்கள் சஸ்பெண்ட் - சேலத்தில் பரபரப்பு

சேலம் மத்திய சிறை

ஜாமீனில் வெளியே வந்த ரெளடியை ரகசியமாக அனுப்பிவைத்த வார்டன்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதுக்குக் காத்திருந்த போலீஸார்; ரெளடியைத் தப்பிக்கவிட்ட வார்டன்கள் சஸ்பெண்ட் - சேலத்தில் பரபரப்பு

ஜாமீனில் வெளியே வந்த ரெளடியை ரகசியமாக அனுப்பிவைத்த வார்டன்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சேலம் மத்திய சிறை

சேலம் மத்திய சிறையில், சமீபகாலமாக கைதிகளுக்குள் மோதல், கைதிகள் வார்டன்களைத் தாக்கும் சம்பவம் என்று அடுத்தடுத்து மோசமான சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரெளடி ஒருவர் வழிப்பறி வழக்குக்காக சேலம் மத்திய சிறையில் தண்டனை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்தார். இப்படி வெளியே வரும் ரெளடிகள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உளவுப் பிரிவு போலீஸார் தகவல் அளிப்பது வழக்கம். அப்போது சம்பந்தப்பட்ட ரெளடி மீது வேறு ஏதும் வழக்கு இருந்தால், வாரன்ட் பெற்று சிறையிலிருந்து வெளியில் வரும்போதே கைதுசெய்துவிடுவார்கள்.

நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட ரெளடி வெளியே வரும் நிலையில், வேறு வழக்கில் போலீஸார் கைதுசெய்யச் சிறைக்கு வெளியே காத்திருந்துள்ளனர். அப்போது சிறை அதிகாரி ஒருவர், அங்கிருந்த தனிப்படையினரிடம், இங்குவைத்து யாரையும் கைதுசெய்யக் கூடாது, ரோட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார். ஆகையால் போலீஸாரும் ரோட்டுக்கு வெளியே காத்திருந்தனர்.

போலீஸ்
போலீஸ்

காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை வெளியே காத்திருந்தும் ஒரே ஒரு முதியவர் மட்டும் வெளியே வந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்து போலீஸார் சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட ரெளடி காலை 11:30 மணிக்கே வெளியே சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் சிறையின் மெயின் கேட் வழியில் ரெளடி வரவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபடவே, பின்னர் விசாரணை மேற்கொண்ட சிறைத்துறை எஸ்.பி., கிருஷ்ணக்குமார் சம்பந்தப்பட்ட ரெளடியை சிறை கேன்டீன் வழியாக சிறைத்துறை வார்டன்கள் ரமேஷ், பூபதி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் கைதியைப் பிடிக்க வந்த போலீஸார் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இதற்கு உடந்தையாக இருந்த சிறை வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism