Published:Updated:

சேலம்: பரோலில் சென்ற கொலை வழக்கு தண்டனைக் கைதி தலைமறைவு; வார்டன் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

சேலம் மத்திய சிறை

சேலம் மத்திய சிறையிலிருந்து பரோலில் சென்ற கைதி ஒருவர் மீண்டும் சிறைக்கு வராமல் தலைமறைவான சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம்: பரோலில் சென்ற கொலை வழக்கு தண்டனைக் கைதி தலைமறைவு; வார்டன் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

சேலம் மத்திய சிறையிலிருந்து பரோலில் சென்ற கைதி ஒருவர் மீண்டும் சிறைக்கு வராமல் தலைமறைவான சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சேலம் மத்திய சிறை

சேலம் மத்திய சிறையில் சமீபகாலமாக அதிகாரிகள் கையூட்டாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு கைதிகளுக்கு தேவையான பொருள்களை வாங்கித்தருவது, சிறையிலிருந்து தப்பிக்க உதவிபுரிவது என்று தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்கள். சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான கைதி ஒருவரை, மற்றொரு வழக்குகளில் கைதுசெய்ய போலீஸார் வெளியே காத்திருந்தனர்.

ஆனால், சிறைத்துறை காவலாளிகள் சிலர் கைதியிடம் ரொக்கமாகப் பணத்தை பெற்றுக்கொண்டு, அந்த நபரை மற்றொரு வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் வழியனுப்பி வைத்துள்ளனர். இதற்கான விசாரணையானது ஒருபுறம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம் சிறைத்துறை காவலாளி ஒருவர் பரோலில் சென்ற கைதியை பைக்கில் அழைத்துச் சென்று தப்பிக்கவைத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறைக் கைதி
சிறைக் கைதி
சித்தரிப்புப்படம்

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரி. இவர் சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு மூன்று நாள்கள் பரோலில் வெளியே சென்றிருக்கிறார். மீண்டும் பரோல் முடிந்து சிறைக்கு வரக்கூடிய நாளில் ஹரி வராததால், சிறைத்துறை அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது மீண்டும் சிறைக்கு வந்துவிட்டதாக அவர்களுடைய உறவினர்கள் கூற, அதிகாரிகள் சிறையின் வாசலிலுள்ள சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்தனர். அதில், சரியாக 25-ம் தேதி மாலை சிறைக்கு முன்பு காரில் வந்து இறங்கும் ஹரியை, சிறை வார்டன் ராமக்கிருஷ்ணன் தனது மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே இறக்கிவிடும் காட்சி பதிவாகியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து போலீஸார் வார்டனிடம் விசாரித்தபோது, கைதி ஹரி, தான் அதிகாரி ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும், தன்னை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் விடுமாறும், பணம் கொடுத்துவிட்டு உடனே திரும்பி வந்துவிடுவதாகவும் கூறினார். அதனால் ஹரியை தனது மோட்டார் பைக்கில் அழைத்துக்கொண்டு போனதாக வார்டன் தெரிவித்திருக்கிறார்.

அதன் மூலம் கைதிக்கு உதவியதாகச் சம்பந்தப்பட்ட வார்டன்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்விதமாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீஸார் ஒரு பக்கம் கைதியுடன் சிறையில் இருந்தவர்கள் யார் வெளியிலிருந்து வருகின்றனர் என்று விசாரித்து வர, மற்றொருபுறம் கைதியிடம் பணம் கேட்ட அதிகாரி யார் என்றும் சிறைத்துறை உளவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.