Published:Updated:

சேலம் மத்திய சிறையில் அதிகரிக்கும் கைதிகள் மோதல் - என்ன நடக்கிறது அங்கு?!

சேலம் மத்திய சிறை

சேலம் மத்திய சிறையில் கைதிகள் மோதல் அதிகரித்திருக்கிறது. என்ன நடக்கிறது எங்கே?

சேலம் மத்திய சிறையில் அதிகரிக்கும் கைதிகள் மோதல் - என்ன நடக்கிறது அங்கு?!

சேலம் மத்திய சிறையில் கைதிகள் மோதல் அதிகரித்திருக்கிறது. என்ன நடக்கிறது எங்கே?

Published:Updated:
சேலம் மத்திய சிறை

தமிழகத்தில் சிறைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சிறைகளில் சேலம் மத்திய சிறைச்சாலையும் ஒன்று. மதுரை, திருச்சிக்கு அடுத்தபடியாக முக்கிய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் இங்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், சேலம் மத்திய சிறையில் சமீபகாலமாக கைதிகள் வார்டனை தாக்குவது, அவர்களுக்காகவே மோதிக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் கோவையிலிருந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்ட குண்டாஸ் கைதிகள் இரண்டு பேர், சிறையில் வார்டனை பல் துலக்கும் பிரஷ்ஷால் குத்தியிருக்கின்றனர்.

இதில் படுகாயமடைந்த வார்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு ரௌடிகளையும் அஸ்தம்பட்டி போலீஸார் கைது செய்து, ஒருவரை பாளையங்கோட்டை சிறையிலும்... மற்றொரு ரௌடியை திருச்சி சிறையிலும் அடைத்தனர்.

சேலம் மத்திய சிறை
சேலம் மத்திய சிறை

அதன்பின்பு சிறைத்துறை உளவுப் போலீஸார் விசாரித்ததில், வார்டனை தாக்குவதற்காக ஏற்கெனவே முன்கூட்டியே 10 பேர் கொண்ட கும்பல் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட ரௌடிகள் இரண்டு பேரை மட்டும் போலீஸார் மாற்று சிறைகளுக்கு அனுப்பிய நிலையில், மற்றவர்கள் சேலம் சிறையிலேயே இருந்து வருவது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில், மதுரையில் நடந்த கொலை வழக்கில் கைதான கார்த்தி, யுவராஜ், லெனின் ஆகிய 3 பேர், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் லெனினுக்கு அடிப்பட்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி மற்றொரு கைதி தவறுதலாக லெனின் மீது இடித்ததாகத் தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த லெனின் கூட்டாளிகள், அந்த கைதியை பயங்கரமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைதிகள்
கைதிகள்
சித்தரிப்புப் படம்

இதுகுறித்து சேலம் மத்திய சிறைத்துறை எஸ்.பி.கிருஷ்ணகுமாரிடம் பேசினோம். ``கைதிகளை முறையாக பாதுகாப்புடன்தான் வழிநடத்தி வருகிறோம். மேலும், சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளிடம் கண்டிப்பான நேரத்தில் கண்டிப்பாகவும், மற்ற நேரங்களில் இயல்பாகவும்தான் பழகி வருகின்றனர். மற்றபடி சிறைத்துறை நிர்வாகம் கட்டுகோப்புடன்தான் இயங்கி வருகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism